அந்த மனுவில், “பிக்சர் ஹவுஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க என்னை ஒப்பந்தம் செய்தது உண்மைதான்.
ஆனால் அதற்காக நான் முன் பணம் எதுவும் வாங்கவில்லை. கால்ஷீட் விவரங்களை ஒரு மாதத்துக்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் ஏப்ரல் 2-ந்தேதி படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என்று மார்ச் 17-ந்தேதிதான் எனக்கு தெரிவித்தனர். அந்த நேரத்தில் நான் புலி படத்தில் நடித்து கொண்டிருந்தேன்.
எனவேதான் அந்த தேதிகளில் வர இயலாது என்று கூறினேன். அதன் பிறகு பட நிறுவனத்தினர் புலி படத்தின் தயாரிப்பாளர்களிடமும் பேசினார்கள்.
ஆனாலும் தேதிகள் ஒதுக்க முடியவில்லை. எனவேதான் அந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் தெரிவித்தேன்.
கோர்ட்டில் எனக்கு எதிராக பட நிறுவனத்தினர் வழக்கு போடுவதற்கு முன்பே தமன்னாவிடம் பேசி படத்துக்கு நாயகியாக ஒப்பந்தம் செய்து விட்டனர்.
இந்த விஷயத்தை நீதிமன்றத்தின் கவனத்தக்குக் கொண்டு வராமல் மறைத்து விட்டார்கள். புது படங்களில் நான் நடிப்பதற்கு தடை உத்தரவும் பெற்று விட்டனர்.
அட்வான்ஸ் தராமலும் தமன்னாவை தேர்வு செய்தும் ஒப்பந்தத்தை மீறியது அவர்கள்தான். எனவே புது படங்களில் நான் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு விசாரணையை நீதிபதி நாளை மறுநாள் 20 -ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.
