சென்னை ‘பிரசிடென்சி ஹோட்டலில் இருந்த புறப்பட்டு சென்றுவிட்டார். பத்மநாபாவும் தனது காரில் புறப்பட ஆயத்தமான போது தான் ஈரோஸ் உறுப்பினர் ஓடிவந்தார்.
மேலே ஹோட்டல் அறையிலிருந்த பாலகுமாரும், சிறீ சபாரத்தினமும் அந்த உறுப்பினர் மூலம் ஒரு தகவல் அனுப்பியிருந்தனர்.
பத்மநாபாவை தங்களை வந்து சந்திக்கும்படி தகவல் அனுப்பியிருந்தார். பத்மநாபா மீண்டும் சென்றார்.
அமெரிக்க தூதரகத்தில் போராளிகள் பாச்சல்
பாலகுமாரின் தந்திரம்
கூட்டமைப்பு பெயரை மாற்றுவதில்லை பிரச்சனையில்லை என்று கூறிவிட்டீர்கள்.
அப்படி பெயரை மாற்றினால் புலிகள் புதிய கூட்டமைப்பை உருவாக்கியதாக கருதப்படும். சிறீ சபாரத்தினமும் இதையே சொல்லுகிறார் என்றார் பாலகுமார்.
பிரபாகரனும் பத்மநாபாவும் கீழே சென்ற போது சிறீ சபாரத்தின் மனதை மாற்றிவிட்டார் பாலகுமார். எனவே பாலகுமாரின் கருத்தை சிறியும் ஆமோதித்தார்.
பெயரை மாற்றுவதில்லை என்ற முடிவுக்கு பத்மநாபாவும் சம்மதித்தார்.
இதன் பின்னர் சில நாட்கள் கழித்து அடுத்த சந்திப்பு நடைபெற்றது. அதில் பிரபா கலந்துகொள்ளவில்லை.
புலிகள் சார்பாக அன்ரன் பாலசிங்கமும் இராசநாயகமும் கலந்து கொண்டனர்.
பெயர் பிரச்சனை மீண்டும் எழுந்தது. அன்ரன் பாலசிங்கம் சில கருத்துக்களை தெரிவித்தார்.
“தம்பி ஒற்றுமைக்கு தயாராக இருக்கிறார். தம்பியை சுற்றியிருக்கும் சிலர் இதை விரும்பவில்லை. நானும் இராசநாயகமும் தப்பியோடு கதைத்து அவரை உடன்பட செய்திருக்கிறோம்.
இந்த நிலையில் கூட்டமைப்பு பெயர் “ஈழத் தேசிய முன்னணி” என்று இருந்தால் எங்களுக்குள் பிரச்சனை வரும். ஏன் தமிழீழம் என்று போடவில்லை என்று கேட்பார்கள்.
அதனால் “ஈழத் தேசிய முன்னணி- புலிகள் கூட்டமைப்பு” என்று அதை்துக்கொள்வோம் என்றார் பாலசிங்கம்.
நீண்ட விவாத்தின் பின்னர் பாலசிங்கத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கையொப்பம் வரும்
தம்பியை சுற்றியிருப்பவர்கள் சிலர் ஒற்றுமை முயற்சியில் நம்பிக்கை கொள்ளவில்லை என்று பாலசிங்கம் கூறியதில் உண்மை இல்லாமல் இல்லை.
கூட்டமைப்பு சார்பாக பத்திரிகைகளுக்கு அறிக்கை விடுக்கப்படுவதுண்டு.
புலிகளது சார்பில் அறிக்கைகளில் கையொப்பமிடுபவர் பேபி சுப்பிரமணியம்.
கூட்டமைப்பு கூட்டத்திற்கு ஒரு நாள் கூட பேபி சுப்பிரமணியம் சென்றது கிடையாது. கூட்டமைப்பு அறிக்கையை பாலசிங்கம் கொண்டு சென்று பேபி சுப்பிரமணியத்திடம் கையெப்பம் வாங்கி வந்து கொடுப்பார்.
பிரபாகரன் நினைத்திருந்தால் பாலசிங்கத்தை கையொப்பம் போடுமாறு கூறியிருக்கலாம்.
ஆனால் பேபி சுப்பிரமணியம் அரசியல் செயலாளராக இருப்பதால் அவர்தான் கையொப்பமிடவேண்டும் என்பதில் மாற்றம் ஏற்படுத்த பிரபா விரும்பவில்லை.
இது மட்டுமல்ல ” விடுதலைப் புலிகள்” பத்திரிகையில் விரிவுரையாளர் நித்தியானந்தன் பல ஆக்கங்களை எழுதிக்கொண்டிருந்தார்.
அவர் எழுதும் ஒவ்வொரு ஆக்கங்களையும் பேபி சுப்பிரமணியம் பார்வையிட்டு அனுமதி கொடுத்த பின்னரே அச்சேறவேண்டும் என்பது பிரபாகரனின் உத்தரவு.
இது குறித்து நித்தியானந்தன் வருத்தப்பட்டதும் உண்டு.
நித்தியானந்தன் போன்றவர்கள் வருவார்கள் -போவார்கள். பேபி சுப்பிரமணியம் போன்றவர்கள் என்றும் தன்னோடு இருப்பார்கள் என்பது பிரபாவின் கருத்து.
விரிவுரையாளர் நித்தியானந்தன் புலிகளில் இருந்து பின்னர் விலக்கப்பட்டார். பேபி சுப்பிரமணியம் “இளம்குமரன்” என்ற பெயரில் இப்போதும் புலிகள் அமைப்பில் இருக்கிறார்.
கூட்டமைப்பு ஒற்றுமை முயற்சிகள் பற்றி பின்னர் பார்க்கலாம்,
1984 இல் நடந்த முக்கியமான சம்பவங்கள் பற்றி இப்போது கூறுகிறேன்.
சி.ஐ.ஏ
தமிழ் மக்களின் போராட்டத்தை நசுக்க இலங்கை அரசுக்கு அமெரிக்கா உதவுகின்றது என்று இயக்கங்கள் குற்றம் சாட்டி வந்தன.
இதில் முன்னணியில் நின்றது ஈ.பி.ஆா.எல. எப் . அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இலங்கை அரசுக்கு பக்கபலமாக இருப்பதாக ஈ.பி.ஆா.எல. எப் . பிரச்சாரம் செய்து வந்தது.
1984ம் ஆண்டு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக ஆாப்பாட்டம் நடந்த ஈ.பி.ஆா.எல. எப் திட்டமிட்டது.
ஒரு நாள் 10 மணிக்கு அமெரிக்க தூதரகம் முன்பாக முன்று ஓட்டோக்களில் சென்று இறங்கினார்கள் ஈ.பி.ஆா.எல. எப் . உறுப்பினர்கள்.
தூதரக வாயிலில் காவலர்கள் நிற்பார்கள் உள்ளே செல்ல அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். எப்படியாவது உள்ளே சென்றுவிடவேண்டும். தூதரக வாயிலில் வைத்து அமெரிக்க கொடியை எரிக்கவேண்டும் என்பதுதான் திட்டம்.
ஓட்டோவிலிருந்து இறங்கியவுடன் காவலரை நோக்கி ஓடிய ரமேஷின் கையில் ஒரு சிறிய கமரா இருந்தது. அதனை காவலருக்கு நேராக நீட்டி மிரட்டியவுடன் காவலர்கள் துப்பாக்கியை போட்டுவிட்டு உள்ளே ஓடிவிட்டனர்.
கமராவை சிறிய துப்பாக்கி என்று காலர்கள் நினைத்துவிட்டர்ர்கள். உள்ளே புகுந்தனர்கள் ஈ.பி.ஆா.எல. எப் . உறுப்பினர்கள்.
சிறிய ஒலி பெருக்கி மூலம் அமெரிக்காவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார் டேவிட்சன். கொடிக்கு தீ வைத்தார் தயாபரன். அதற்கிடையில் பொலிசாருக்கு தகவல் சென்றுவிட்டது.
ஈ.பி.ஆா.எல. எப் . உறுப்பினர்கள் சுற்றி வளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. ஆரின் உத்தரவின் படி அன்று மாலையில் கைதானவர்கள் விடுதலையானார்கள்.
அன்று முதல் சென்னையில் அமெரிக்க தூதரகம் முன்பாக பொலிஸ் டிரக் ஒன்று ஆயுதம் தரித்த பொலிசாரோடு காவலுக்கு நிறுத்தப்பட்டது.
தூதரக பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.
தூதரகம் ஒன்றுக்குள் நுழைவது பாரதூரமான குற்றம். அத்து மீறி நுழைபவர்களை சுட்டுதள்ளவும் அங்கிருக்கும் காவலர்களுக்கு உரிமையிருக்கிறது.
அதனை தூதரகம் அமைந்துள்ள நாடுகூட கேட்க முடியாது.
அன்று காவலர்கள் பயந்திருக்காவிட்டால் தூதரகத்தில் நுழைந்தவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்திருக்க முடியும். அமெரிக்க எதிர்ப்பில் முன்னின்ற இயக்கமாக ஈ.பி.ஆா.எல. எப் அடையாளம் காணப்பட்டது.
தம்பதி மீது குறி
யாழ்பாணத்திலும் சி.ஜ.ஏ உளவுப் பிரிவு ஊடுருவியிருப்பதாக சந்தேகம் நிலவியது.
உதவி திட்டங்கள் , அபிவிருத்தி ஆராய்ச்சிகள் என்ற போர்வைியில் சி.ஜ.ஏ உளவு பிரிவினர்கள் நடமாடுவதாக ஈ.பி.ஆா.எல. எப் சந்தேகப்பட்டது.
அவ்வாறான சந்தேகத்தில் சிக்கிக்கொண்டனர் அலன் தம்பதியினர்.
யாழ்பாணத்தில் குருநகர் இராணுவ முகாமுக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அவர்கள் தங்கியிருந்தனர். அலன் தம்பதியினரை கடத்தி சென்று பயண கைதிகளாக்குமாறு ஈ.பி.ஆா.எல. எப் மக்கள் விடுதலைப்படை தளபதியாக இருந்த டக்ளஸ் தேவானந்தா உத்தரவிட்டார்.
1984ம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி இரவு அலன் தம்பதியினரின் வீட்டுக்குள் புகுந்தனர் மக்கள் விடுதலைப்படை உறுப்பினர்கள்.
வீட்டுக்கு முன்னால் இராணுவ முகாம். காவலுக்கு நின்ற இராணுவத்தினரின் கண்களில் படாமல் காரியத்தை முடிக்கவேண்டும்.
தமது இரவுணவை முடித்துவிட்டு படுக்கையறையில் உல்லாசமாக இருந்தனர் அலன் தம்பதியினர்.
சிவ பூசைக்குள் கரடி நுழைந்தது போல் திடீரென்று கதவு தட்டப்பட்டது.
துணியென்றை இடுப்பில் சுற்றிக்கொண்டு வந்து கதவை திறந்தார் அலென். அவரை துப்பாக்கி முனையில் மடக்கினார்கள். திருமதி மேரி அலனும் துணிகளை அள்ளிச் சுற்றிக்கொண்டு ஓடி வந்தார்.
இருவரையும் மாற்று உடை அணிந்து வருமாறு கூறப்பட்டது.
பின்னர் தம்பதியினர் மறைவிடம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கோரிக்கைகள்
“20 போராளிகள் விடுதலை செய்யப்படவேண்டும. “
“5 கோடி மதிப்புள்ள தங்கம் தரப்படவேண்டும்” என்று மறுநாள் அரசுக்கு அறிவிக்கப்பட்டது. விடுதலை செய்யப்பட வேண்டிய போராளிகளது பெயர்களும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டன.
ஜே.ஆர். அரசு திகைத்துப் போனது. உலகெங்கும் செய்தி பரவியது. இலங்கையிலிருந்த வெளிநாட்டவர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளானது.
யாழ்பாணத்திலிருந்த வெளிநாட்டவர்கள் அனைவரும் பொலிஸ் பாதுகாப்போடு கொழும்புக்கு கூட்டிச் செல்லப்பட்டனர்.
அமெரிக்க அரசு தனது பிரஜைகள் பற்றி கவலையை இலங்கை அரசுக்கு தெரிவித்தது.
பொலிசாரும் இராணுவத்தினரும் யாழ்பாணத்தில் சல்லடை போட்டு தேடினார்கள். பயன் இல்லை.
இலங்கை இந்தியாவின் ஒத்துழைப்பை கோரியது. தலைவர் பத்மநாபாவும் , மக்கள் விடுதலைப்படை பிரதம தளபதி டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் நாட்டில் இருந்தனர்.
அவாகளோடு இந்திய அரசு தொடர்பு கொண்டு உதவவேண்டு என்று இலங்கை அரசு கேட்டுக்கொண்டது.
தமிழகத்தில் கைது
கடத்தப்பட்ட அலன் தம்பதிகள் யாழ்பாணத்தில் ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்தனர். கடத்தப்பட்டவாகள் தமிழ்நாட்டுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என இலங்கை அரசு நம்பியது.
இந்திய அரசு கூட அலன் தம்பதியினர்கள் தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றே நினைத்தது.
இந்திய பிரதமராக இருந்த இந்திராகாந்தி அலன் தம்பதி விடுதலை செய்யவேண்டும் என்று அக்கறை காட்டினார்.
தமிழ்நாட்டிலிருந்த ஈ.பி.ஆா.எல. எப் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டனர்.
சுரேஷ் பிரேமச்சந்திரனை கைது செய்த தமிழக இரகசிய பொலிசார் அவரிடமிருந்த டயரியை துருவி ஆராய்நதனர்.
பத்மநாபாவையும், டக்ளஸ் தேவானந்தாவையும் எப்படியாவது கைது செய்துவிட வேண்டும் என்பதே அவர்களது நோக்கம்.
பத்மநாபா அப்பொழுது டில்லியில் இருந்தார். அங்கிருந்தால் கைதுசெய்யப்படலாம் என்பதால் விமானம் மூலம் செ்ன்னை திரும்பினார்.
இதனை அறிந்துவிட்ட தமிழக பொலிசின் உளவுப்பிரிவினர் விமான நிலையத்தின் முன்பாக காத்திருந்தனர். பத்மநாபாவை அழைத்துச் செல்ல வந்த அவரது கார் மீது உளவு பிரிவினரது கழுகு பார்வை பதிந்திருந்தது.
ஈ.பி.ஆா.எல. எப் ஒரு உளவுப்பிரிவை வைத்திருந்தது. மக்கள் ஆய்வு பிரிவு (MAP )என்பது அதன் பெயர். இந்தியாவில் அதற்கு பொறுப்பாக இருந்தவர் ரமேஷ்.
விமான நிலையத்தில் வந்திறங்கிய பத்நாபாவை வேறு ஒரு காரில் ரமேஷ் அழைத்துச் சென்றுவிட்டார். மக்கள் ஆய்வு பிரிவின் மறைவிடத்துக்கு பத்மநாபா அழைத்துச் செல்லப்பட்டார்.
முற்றுகை
தமிழநாட்டில் இருந்த ஈ.பி.ஆா.எல. எப் அமைபின் தங்குமிடங்கள் யாவும் தமிழக உளவு பிரிவுக்கு நன்கு தெரியும். ஆனால் மக்கள் ஆய்வு பிரிவின் மறைவிடம் மட்டும் தெரிந்திருக்கவில்லை.
சுரேஷ் பிரேமச்சந்திரனின் டயரியில் மக்கள் ஆய்வு பிரிவின் தொலை பேசி இலக்கம் இருந்தது.
அதனை வைத்து முகவரியை கண்டுபிடித்த தமிழக பொலிசின் உளவுத்துறை இரவு 12மணிக்கு அந்த மறைவிடத்தை முற்றுகையிட்டது.
பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் மக்கள் ஆய்வு பிரிவு பொறுப்பாளர் மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பத்மநாபா, டக்ளஸ் தேவானந்தா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை தனியாக வைத்து தமிழக உளவுத்துறை விசாரித்தது.
தமிழக டி.ஜி.பியாக அப்போதிருந்தவர் மோகனதாஸ். மோகனதாசும் ஒரு சி.ஜ.ஏ அனுதாபி என்றே கருதப்பட்டார்.
தமிழ் நாட்டிலிருந்த ஈழப்போராளிகள் பற்றிய விபரங்களை மோகனதாஸ் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவுவதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டு வந்தது.
எனவே மோகனதாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் முரண்டு பிடித்தனர்.
இந்திரா வேண்டுகோள்
இலங்கையில் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்தவர் அத்துலத் முதலி.
இந்திய அரசின் முயற்சி தோல்வி அடைந்ததால் போராளிகளது கோரிக்கைக்கு இணங்க அவர் தயாராக இருந்தார்.
போராளிகளால் விடுதலை செய்யுமாறு கேட்கப்பட்ட 20வது அரசியல் கைதிகளும் பலாலி விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டு, விடுவிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்திய பிரதமர் இந்திராகாந்தி அலன் தம்பதியை விடுதலை செய்ய வேண்டும் என்ற தனது விருப்பத்தை ஈ.பி.ஆா.எல. எப் தலைவர்களுக்கு தெரியப்படுத்தினார்.
இந்திராகாந்தியின் விருப்பத்தை மீறுவது சரியல்ல என்று ஈ.பி.ஆா.எல. எப் தலைவர்கள் முடிவு செய்தனர்.
அந்த முடிவை மக்கள் விடுதலைப்படை தளபதி டக்ளஸ் தேவானந்தா யாழ்பாணத்துக்கு அனுப்பி வைத்தவுடன் அலன் தம்பதி விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கையரசு நிம்மதி பெருமூச்சு விட்டது. அலன் தம்பதி தம்பதி கடத்தல் நடவடிக்கையில் ரெக்ஸ், மோகன், குமரி, இந்திரன், ரோசன் ஆகியோரும் பங்கு கொண்டனர்.
தமிழக பொலிஸ் டி.ஜி. பியாக இருந்த ஓய்வு பெற்ற மோகனதாஸ் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார்.
எம்.ஜி.ஆா “நிஜமும்-நிழலும்” என்பது அதன் பெயர்.
அந்த புத்தகத்தில் அலன் தம்பதி கடத்தல் விடயத்தில் தமிழக பொலிஸ் எடுத்த நடவடிக்கைகள் பற்றி உண்மைக்கு மாறான தகவல்கள் தெரிவித்துள்ளார்.
தனது மிரட்டல்களால் தலைவர்கள் பணிந்தனர் என்று கூறியிருப்பதில் சயதம்பட்டம் மட்டுமே இருக்கிறது.
தமழ் நாட்டில் அப்போதிருந்த சூழலில் எந்தவொரு போராளி அமைப்பபையும் பொலிசார் மிரட்ட இயலாது. அந்தளவுக்கு தமிழக மக்களின் பேராதரவு இருந்தது.
தொடரும….
அற்புதன் எழுதுவது
முன்னைய தொடர்களை வாசிக்க இங்கே அழுத்தவும்ம்»»» (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை..1 தொடக்கம் ..27)