கொத்மலை பெட்ராசி தோட்டத்தில் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய நபர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

68 வயதுடைய   மாரிமுத்து லெட்சுமி  என்ற தனது தாயை அடித்து கொலை செய்த 46 வயதுடைய மாரிமுத்து குணசேகரன் என்பவரே பல்லேகல சிறைச்சாலையில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

 தாய் கொலை: மகன் கைது – 6 பிள்ளைகளைப் பெற்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
18-04-2015

thai1-680x365கொத்மலை – பெரட்டாசி தோட்டம் – ரஸ்புரூக் பகுதியில் 78 வயதுடைய தாயொருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

மாரிமுத்து லெட்சுமி என்ற குறித்த தாய் புற்றுநோயால் அவதிப்பட்ட நிலையில் கம்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுத் திரும்பியவராவார்.

இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகளும், நான்கு ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

இவர்களில் ஒரு மகன் இறந்து விட்டார், ஒருவர் காணாமல் போய்வுள்ளார். இந்தநிலையில் இவரின் இரண்டாவது மகனான மாரிமுத்து குணசேகரன் (வயது 46) மற்றும் அவரது பிள்ளைகளுடன் இவர் வசித்துவந்துள்ளார்.

மகனின் மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். பிள்ளைகள் உறவினர் வீடுகளிலேயே அதிகமாக தங்கியிருப்பர் எனத் தெரிகிறது.

இந்தநிலையில் வீட்டில் தாய்க்கும் மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுவதாக கூறப்படுகின்றது. சம்பவ தினமான 16.04.2015 அன்று இரவு பிள்ளைகள் வீட்டில் இல்லாத போது தாய்க்கும் மதுபோதையில் இருந்த மகனுக்கும் சண்டை மூண்டுள்ளது.

இதன்போதே குறித்த பெண் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

பின் நேற்று (17.04.2015) காலை வேலையில் குறித்த சந்தேகநபரான மாரிமுத்து குருநாதனின் மகன் உறவினர் வீட்டிலிருந்து வீட்டுக்கு திரும்பிய வேளையில் பாட்டி இறந்து இருப்பதை கண்டுள்ளார்.

அத்துடன் சந்தேகநபர் மலசகூடத்திற்கு அருகில் குழி ஒன்றையும் வெட்டிக் கொண்டிருந்துள்ளார். மலசல கூடத்தின் மூடியையும் அகற்றும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இதனைக் கண்ட பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு சந்தேகநபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சடலம் கம்பளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த 78 வயதுடைய தாய் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இக் கொலை தொடர்பாக புஸ்ஸல்லாவ பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேகநபர் தனது வாக்கு மூலத்தை வழங்கியுள்ளார்.

இதன்படி தனது தாயானவர் நோய் காரணமாக கன்னத்தில் பாரிய கட்டி ஒன்று இருந்தது. அதை பார்கின்ற தோட்ட மக்கள் அம்மாவை குறை கூருகின்றார்கள். அதனால் கட்டியை அகற்றினேன் அம்மா இறந்துவிட்டார் என்று கூறியுள்ளார்.

இதேவேளை பிள்ளைகள் எவரும் தாயின் சடலத்தை பொருப்பேற்று இறுதிக் கிரியைகளை செய்யமுன் வரவில்லை எனத் தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் பொது மக்களின் பூரண ஒத்துழைப்புடன் கம்பளை வைத்தியசாலை மயானத்திலேயே நல்லடக்கம் செய்ய மக்கள் மற்றும் உறவினர்கள் முன் வந்துள்ளனர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share.
Leave A Reply