நோர்வூட் – அயரபி தோட்ட பகுதியில் குளவித்தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரத்திலிருந்த குளவி கூடே இவ்வாறு கலைந்து வந்து இவரை தாக்கியுள்ளது.
சம்பவத்தில் 79 வயதுடைய தேவசகாயம் என்பவரே உயிரிழந்தவராவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.