பிரான்சில் இடம்பெற்ற கொடூர விபத்துச் சம்பவத்தில் இரு தமிழர்கள் பலியாகியுள்ளனர். இந்த விபத்து கடந்த வியாழக்கிழமை இரவு பிரான்ஸ் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் 34 மற்றும் 21 வயதுடைய தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மூன்று வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் இந்தக் கொடூர விபத்து ஏற்பட்டுள்ளது.

பிரான்சில் லியோனில் இருந்து பரிஸ் வரும் A6 நெடுஞ்சாலையில் கடந்த வியாழன் இரவு கொடூரமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.

இவ் விபத்தினால் பல மணி நேரங்கள் நெடுஞ்சாலையே பூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Paris-Tamil-01
சம்பவதினம் இரவு 23h30 அளவில் நெடுஞ்சாலையில் Peugeot 407 வாகனம் (car) அரைவட்டமாகத் திருப்பி, போக்குவரத்தின் எதிர்த்திசையில், மிகவும் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியபடி குறுக்கும் நெடுக்குமாக இரு இளைஞர்கள் வந்துள்ளனர்.

இது உடனடியான காவல்தறையினருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் அந்த  வாகனத்தை  மறிக்க முயன்றுள்ளனர்.

ஆனாலும் அதற்குள்ளாக எதிரே வந்த RENAULT KANGOO வாகனத்துடன் இவர்கள் நேருக்கு நேராக மோதியுள்ளனர். இதே விபத்தில் மூன்றாவதாக ஒரு பாரஊர்தியும் விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

Paris-Tamil-02விபத்துக் களத்திலேயே விபத்தை ஏற்படுத்திய சாரதியும், அவரின் பக்கத்திலிருந்தவரும், Kangoo வாகனச் சாரதியும் கொல்லப்பட்டுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் நிறைபோதையில் இருந்துள்ளனர். இவர்களது இரத்தத்தில் மிக அதிகளவான அல்கோகோலாக லிட்டருக்கு 2 தொடக்கம் 3 கிராம் வரை இருந்துள்ளது.

இவர்கள் மதுபோதையில் வாகனத்தின் கதவுகளையும் திறந்து விட்டு நெடுஞ்சாலையில் அரைவட்டமாகத் திரும்பித்திரும்பி எதிர்த்திசையில் பயணம் செய்து விளையாடி உள்ளனர். இது அவர்கள் உயிரையும் பறித்து எதிர்த்திசையில் வந்த சாரதியின் உயிரையும் பறித்துள்ளது.

Paris-Tamil-03
மதுபோதையில் நெடுஞ்சாலையில் பேராபத்தை ஏற்படுத்தி விபத்தில் கொல்லப்பட்ட இளைஞர்கள் இருவரும் தமிழ் இளைஞர்கள் எனவும் ஒருவர் 34 வயதுடைய லியோனைச் சேர்ந்தவர் என்றும் மற்றையவர் 21 வயதுடைய ஓல்நே-சூ-புவாவைச் சேரந்தவர் என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Paris-Tamil-04Paris-Tamil

Conduite à contresens sur l’A6 en Saône-et-Loire : un accident fait deux morts et deux blessés

Share.
Leave A Reply