தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சுசெக்ஸ் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் கிர்பி (102) என்பவரும் டோரீன் லக்கி (91) என்பவரும் சில நாட்களாக தங்களுக்குள் காதல் வளர்த்து வந்தனர்.

 வரும் ஜூன் மாதம் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்துள்ள இவர்கள், உலகில் மிகவும் வயதான பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் காதல் ஜோடிகள் என்ற சாதனையையும் ஏற்படுத்தவுள்ளனர்.

 சுமார் 25 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்து வந்த ஜார்ஜ் கிர்பியும், டோரீன் லக்கியும் சமீபகாலம் வரை தானுண்டு-தன் வேலையுண்டு என்று ‘லிவ் டு கெதர்’ முறையில் இருந்து வந்துள்ளனர்.

 பின்னர், திடீரென அவர்களுக்குள் பூத்த காதல், அவர்களை திருமண பந்தத்தை நோக்கி முன்நகர்த்த தொடங்கியுள்ளது என இருவருக்கும் பொதுவான ஒரு குடும்ப நண்பர் தெரிவித்துள்ளார்.

 வரும் ஜூன் மாதத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால், உலகில் மிகவும் வயதான பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் காதல் ஜோடிகள் என கின்னஸ் புத்தகத்தில் இவர்களின் பெயர் இடம்பெறும் என்பது, குறிப்பிடத்தக்கது.

படுக்கையிலேயே 20 ஆண்டுகளாக இருக்கும் இளைஞரை காதலித்து மணந்தார் புதுமைப்பெண்
29-04-2015

sivakuladevi_2384255fஆடம்பரம், அழகு, ஆஸ்தி, அந்தஸ்து என ஒவ்வொன்றாக பொருத்தம் பார்த்து நடக்கும் திருமணங்களில் பல பிளவுபட்டுக் கொண்டிருக்கும் காலகட்டம் இது.

இவற்றுக்கு மத்தியில் மனப்பொருத்தத்தை மட்டுமே பார்த்து கைகூடிய காதல் திருமணம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள மருதூர் குறிச்சி காலனியில் இத்திருமணம் நடந்துள்ளது. மணமகன் ஜெயகுமார் (30) கடந்த 20 ஆண்டுகளாக கை, கால்கள் ஊனமாகி படுத்த படுக்கையாக உள்ளார்.

இவரை திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பருத்திபாட்டை சேர்ந்த சிவகுலதேவி (28) என்ற பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மணமகன் ஜெயகுமார் படுக்கையில் இருந்தபடியே சிவகுலதேவியின் கழுத்தில் தாலி கட்டினார்.

இந்த திருமணம் வாட்ஸ் அப் மற்றும் இணையதளங்களில் பரவி, `லைக்’களை அள்ளியது. `தி இந்து’ நாளிதழிடம் மணப்பெண் சிவகுலதேவி கூறியதாவது:

`இரட்டையரான விஜயகுமார், ஜெயகுமார் சகோதரர்களுக்கு சிறு வயதிலேயே ஏற்பட்ட நோய் தாக்குதல் காரணமாக, அவர்களால் எழுந்து நடக்க முடியாது. 20 ஆண்டுகளாக படுத்த படுக்கையாகவே உள்ளனர்.

இவர்களில் மூத்தவரான விஜயகுமாரை, கேரள மாநிலத்தை சேர்ந்த மஞ்சுஷா என்ற பெண் திருமணம் செய்து கொண்டதை இரண்டரை ஆண்டுகளுக்கு முன் பத்திரிகையில் பார்த்தேன்.

படுத்த படுக்கையாக இருக்கும் விஜய குமாருக்கு மஞ்சுஷா வாழ்க்கை கொடுத்தது என்னை கவர்ந்தது. அவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக உள்ளது. அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆடம்பரமான ஒருவரை திருமணம் செய்வதைவிட, மணம் முடிப்பவருக்கு சிறந்த சேவை செய்வதுடன் நல்ல மனைவியாக வாழ்நாள் முழுவதும் இருக்க முடிவு செய்தேன்.

ஜெயகுமாரை அவரது வீட்டுக்கு சென்று சந்தித்தேன். அவரிடம் மனம் விட்டு பேசினேன். அவர்தான் முதலில் என்னிடம் காதலை சொன்னார். நானும் சம்மதித்தேன். இரு ஆண்டுகளாக காதலித்து வந்தோம்.

நடைமுறை வாழ்க்கை பிரச்சினைகளை கூறி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனது முடிவில் தெளிவாக இருந்தேன். அவரது கள்ளம் கபடமற்ற மன அழகில் மட்டுமே மயங்கினேன்.

இதை பெற்றோரிடம் எடுத்துக் கூறியபோது சம்மதித்தனர். இறுதி மூச்சு உள்ளவரை எங்கள் காதல் வாழும்’ என்றார்.

சிவகுலதேவியை திருமணம் செய்தது குறித்து ஜெயக்குமார் கூறும்போது, `ஊனமுற்றோர் உதவித்தொகை திட்டத்தின்கீழ் அரசு வழங்கும் 1000 ரூபாயில் குடும்பத்தை நடத்தி வரும் எனக்கு, எதிர்காலம் குறித்து கேள்விக்குறியாகவே இருந்தது.

ஆனால் என்னையும் ஒரு பெண் மனதார காதலித்து திருமணம் செய்திருப்பது வாழ்க்கையில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது’ என்றார்.

ஜெயகுமாரின் அண்ணன் விஜயகுமார் கூறும்போது, `கேள்விக்குறியான எங்கள் வாழ்வு வெள்ளையுள்ளம் கொண்ட இரு பெண்களால் தழைத்துள்ளது’ என்றார்.

Share.
Leave A Reply