ஏறாவூரில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக்குற்றிகள், ஏறாவூர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தொப்பிகலைக் காட்டுப்பகுதியிலிருந்து, 9 சைக்கிள்களில் இவை கடத்தப்பட்டுள்ளன.
எனினும் ஏனையவர்கள் தப்பியோடியுள்ள நிலையில், ஒருவர் மாத்திரமே பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
இவரிடம் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த பொலிஸார், தப்பியோடியவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
கடத்தப்பட்ட தேக்குமரக் குற்றிகளின் பெறுமதி சுமார் 75ஆயிரமென மதிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.