தரகர் மூலம் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பெண் பார்க்கும் படலத்திற்காக பெண் வீட்டுக்குச் சென்ற மாப்பிளை அங்கு வைத்து கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் கடந்த வாரம் மீசாலையில் இடம்பெற்றுள்ளது.

காப்புறுதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் நபர்,ஏராளமான சீதனத்துடன் தரகர் மூலம் நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பார்வையிடடுவதற்காக தனது உறவினர்கள் சகிதம் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

குறித்த நபர் ஏற்கனவே ஏராளமான மன்மத விளையாட்டுக்களை பல யுவதிகளுடன் புரிந்து அவர்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியவர் என தெரியவருகின்றது.

பெண் வீட்டுக்குச் சென்றவரை அங்கு நின்ற பெண்ணின் துாரத்து உறவினரான ஒருவர் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஏனெினல் காப்புறுதி முகவராக தொழில் புரிந்த அவரது மகளை குறித்த நபர் காதலித்து ஏமாற்றியதால் அவர்களுக்கிடையில்
அந்நேரம் பெரும் சண்டை நடந்ததுள்ளது.

பெண் பார்க்க வந்தவரை நெருங்கிய குறித்த உறவினர் இது தொடர்பாக அங்கு நின்றவர்களுக்கு தெரிவிக்கவே பெண் வீட்டுக்காரர்கள் குறித்த மாப்பிளையை தாக்கியதாகத் தெரியவருகின்றது.

தனது கைத் தொலைபேசியை அங்கேயே போட்டுவிட்டு மாப்பிளை தனது தாய், தந்தை உறவினர்களை விட்டுவிட்டு ஓடித் தப்பியதாகத் தெரியவருகின்றது. பெண்ணின் உறவினர்களிடத்தில் சிக்கிய மாப்பிளையின் உறவுகள் பலத்த கெஞ்சல்களுக்கு மத்தியில் தாக்குதலில் இருந்து தப்பி வெளியேறியுள்ளனர்.

மாப்பிளையாகப் போன நபர் பல காப்புறுதி நிறுவனங்களில் பணியாற்றி ஏராளமானவர்களின் பணத்தை பெற்று ஏமாற்றியுள்ளார்.

அத்துடன் பல பெண்களை தனது வலையில் வீழ்த்தி அவர்களை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றியவர் எனவும் தெரியவருகின்றது.

Share.
Leave A Reply