இரு வருடங்களாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்து சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்ட பெண் பசியைத் தணிவிக்க பொலித்தீனை உண்ட கொடுமை
பெண்ணொருவர் இரு வருடங்களுக்கு மேலாக குடும்பமொன்றால் சித்திரவதை செய்யப்பட்டு கழுத்தில் சங்கிலியால் கட்டப்பட்டு அடிமையாக நடத்தப்பட்டதுடன், தனது பசியை தணிவிக்க துணிகளை சுற்றப் பயன்பட்ட பொலித்தீன் உறைகளை உண்டு வந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
சுந்துரி என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி பெண் தன்னை அடிமையாக நடத்தி வந்த குடும்பத்திடமிருந்து தப்பி வந்து பொலிஸாரிடம் தஞ்சமடைந்ததையடுத்தே அவருக்கு நேர்ந்த கொடுமை அம்பலமாகியுள்ளது.
இரு வருடங்களுக்கு முன்னர் தொழில் வாய்ப்பைப் பெறும் முகமாக மெக்ஸிக்கோவின் தலைநகரில் வசிக்கும் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வந்த குறிப்பிட்ட குடும்பத்தை அணுகிய அந்தப் பெண் (22 வயது), உடைகளை இஸ்திரிகை செய்யும் பணிக்கு அந்தக் குடும்பத்தினரால் அமர்த்தப்பட்டார்.
ஆரம்பத்தில் அவருக்கு தங்குவதற்கான இடம் மற்றும் ஊதியத்தை வழங்கிய அந்தக் குடும்பத்தினர், அவர் திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கு ஆளானதையடுத்து அவருக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தியதுடன் அவரைக் கட்டிவைத்து அடித்து உதைத்து கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.
அவருக்கு ஒரு நேர உணவை மட்டுமே வழங்கிய அந்தக் குடும்பத்தினர், அவரை ஊதியமின்றி தினசரி 12 மணி நேரம் உடைகளை இஸ்திரிகை செய்யும் பணியில் ஈடுபடுத்தி வந்துள்ளனர்.
இது தொடர்பில் சுந்துரி விபரிக்கையில், தன்னை அந்தக் குடும்பத்தினர் அடித்து உதைத்ததுடன் இரும்பால் சூடுவைத்துக் கொடுமைப்படுத்தியதாக தெரிவித்தார்.
சில சமயங்களில் பசிக்கொடுமையால் வயிற்றை நிரப்ப துணிகளை சுற்றியுள்ள பொலித்தீன்களை உண்ண நேர்ந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில் சம்பவ தினம் அவரது கழுத்தைக் கட்டியிருந்த சங்கிலி தற்செயலாக சரியாகக் கட்டப்படாததால் இந்த சங்கிலியிலிருந்து தன்னை விடுவித்து தப்பி வந்ததாக அவர் தெரிவித்தார்.
சங்கிலியால் கழுத்தில் கட்டப்பட்டதால் சுந்துரியின் கழுத்தில் மோசமான காயங்கள் ஏற்பட்டிருந்தன. அத்துடன் அவரது உடல் முழுவதும் அடி காயங்களும் தீயால் சுட்ட காயங்களும் காணப்பட்டன.
அதுமட்டுமல்லாது போஷாக்கின்மையால் கடும் குருதிச்சோகையால் பாதிக்கப்பட்டு வயோதிப பெண் போன்ற தோற்றத்தில் அவர் காணப்பட்டார்.
இதனையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக மெக்ஸிக்கோவின் தலைநகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Left to right: Leticia Molina Ochoa, her sister Fany Molina Ochoa and Ivette Hernandez Molina have all been detained on suspicion of holding Zunduri against her wil. annet Hernandez Molina (left) and Jose de Jesus Sanchez Vega have also both been arrested by police
அவர்கள் 40 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.