இந்­தோ­னே­ஷி­யாவில் போதைப்­பொருள் கடத்­திய குற்­றச்­சாட்டில் 8 பேருக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­ட­மைக்கு உலகின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் கண்­ட­னங்கள் எழுந்­துள்­ளன.

409266-679b73be-a1f7-11e4-acaf-e0674697f2ed(Bali Nine members (top L-R) Myuran Sukumaran, Andrew Chan and Martin Eric Stephens, 2nd row (from L-R) Chen Si Yi, Tach Duc Thanh Nguyen and Matthew Norman, and 3rd row (from L-R) Scott Rush, Michael Czugaj and Renae Lawrence.)

அவுஸ்தி­ரே­லி­யர்­க­ளான மயூரன் சுகு­மாரன் (34), அன்ட்ரூ சான் (31), நைஜீ­ரி­யாவைச் சேர்ந்த மார்ட்டின் ஆண்­டர்சன் (50), ரஹீம் சலாமி (50) , சில்­வெஸ்டர் வொலிசே (47), ஒக்­வூ­டிலி ஒய­டான்ஸே (41), இந்­தோ­னே­ஷி­யாவைச் சேர்ந்த செய்னல் அபிதீன் (50) பிரே­ஸிலைச் சேர்ந்த ரொட்­ரிகோ குலார்ட் ஆகி­யோ­ருக்கு இந்­தோ­னே­ஷிய நேரப்­படி புதன்­கி­ழமை அதி­காலை துப்­பாக்கிக் குழு­வி­னரால் சுடப்­பட்டு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டது.

இவர்­க­ளுடன் சேர்த்து மரண தண்­டனை நிறை­வேற்­றப்­படவிருந்த பிலிப்­பைன்ஸை சேர்ந்த மேரி வெலோசோ என்­பவர் மாத்­திரம் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தி­லி­ருந்து இறுதி நேரத்தில் தப்­பினார்.

போதைப் பொருள் பெண்­ணொ­ருவருவருக்கு மாத்­திரம் நேற்­று­முன்­தினம் தண்­டனை நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.

போதை­ம­ருந்தை கடத்­து­வ­தற்கு மேரி ஜேன் வெலொ­சோவை தான் பயன்­ப­டுத்திக் கொண்­ட­தாக கூறி, பெண் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸ் நிலை­யத்தில் சர­ண­டைந்த­தை­ய­டுத்து இவரின் மர­ண­தண்­டனை நிறை­வேற்றம் ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட மேற்­படி 8 பேரில் மயூரன் சுகு­மாரன் , அன்ட்ரூ சான் ஆகியோர் பாலி நைன் என குறிப்பிடப்படும் 2005 ஆம் ஆண்டில் கைது செய்­யப்­பட்ட 9 பேர் கொண்ட குழுவின் அங்­கத்­த­வர்­க­ளாவர்.

mauranMyuran Sukumaran as a young, happy boy.  Andrew Chan as a child. A far cry from where he is now

இவர்­க­ளுக்கு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை தடுப்­ப­தற்கு அவுஸ்­தி­ரே­லியா கடு­மை­யாக பாடு­பட்­டது. தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை தாம­திக்­கு­மாறு அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் விடுத்த கோரிக்­கை­யையும் நிரா­க­ரித்து.

127_Untitled-9இந்த சர்ச்சை கார­ண­மாக இந்­தோ­னே­ஷி­யா­வுக்­கான தனது தூது­வ­ரையும் அவுஸ்­தி­ரே­லிய அர­சாங்கம் திருப்பி அழைத்­துள்­ளது.

ஆனால், அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் வழங்­கிய தக­வலின் மூலமே மேற்­படி 9 பேரையும் இந்­தோ­னே­ஷிய அதி­கா­ரிகள் கைது செய்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இக்­கு­ழுவின் உறுப்­பி­னர்­களில் ஒரு­வ­ரான தந்­தையே இக்­க­டத்தல் விடயம் அம்­ப­ல­மா­கு­வ­தற்கு அடித்­தளம் அமைத்­தவர்.

இக்­கு­ழுவைச் சேர்ந்த ஸ்கொட் ரஷ் எனும் இளைஞர் 2005 ஆம் ஆண்டு 19 வயது இளை­ஞ­ராக இருந்தார். அவ­ரிடம் பணமோ கட­வுச்­சீட்டோ இருக்­க­வில்லை. அவர் போதைப்­பொருள் பயன்­ப­டுத்­தி­யதை அவரின் தந்­தை­யான, லீ ரஷ் அறிந்­தி­ருந்தார்.

2005 ஏப்­ரலில் ஸ்கொட் ரஷ், இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவுக்குச் செல்­லப்­போ­வதை லீ ரஷ் அறிந்தார். தனது மகன் பணத்­துக்­காக போதைப்­பொ­ருளை கடத்­தி­வ­ரக்­கூடும் என லீ ரஷ் அஞ்­சினார்.

அதை­ய­டுத்து, தனது நண்­ப­ரான சட்­டத்­த­ரணி ரொபரட் மையர்ஸுன் லீ ரஷ் தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

127600859-scott-rush19 வய­தான ஸ்கொட் ரஷ் போதைப்­பொருள் கடத்தல் குற்­ற­ச்செ­யலில் ஈடு­பட்டு நெருக்­க­டிக்­குள்­ளா­வதை தடுப்­ப­தற்கு லீ ரஷ்ஷும் ரொபர்ட் மையர்ஸும் இணங்­கினர்.

அதை­ய­டுத்து அவுஸ்­தி­ரே­லிய சமஷ்டி பொலி­ஸா­ருக்கு இவ்­வி­டயம் குறித்து ரொபர்ட் தெரி­வித்தார்.

ஸ்கொட் ரஷ், அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து புறப்­ப­டு­வதை தடுப்­பதே அவரின் தந்­தை­யி­னதும் தந்தையின் நண்­ப­ரான ரொபர்ட் மையர்­ஸி­னதும் நோக்­க­மாக இருந்­தது.

ஸ்கொட் ரஷ்ஷை தாம் தடுப்­ப­தாக ஏ.எவ்.பி எனக் குறிப்­பி­டப்­படும் அவுஸ்­தி­ரே­லிய சமஷ்டி (மத்­திய) பொலிஸார் உறு­தி­ய­ளித்­தனர் என ரொபர்ட் கூறு­கிறார்.

ஆனால், அவுஸ்­தி­ரே­லிய ஊட­கங்­களின் தக­வல்­க­ளின்­படி நடந்­தது வேறு. ஸ்கொட் ரஷ் அவுஸ்திரேலி­யா­வி­லி­ருந்து புறப்­ப­டு­வதை தடுப்­ப­தற்குப் பதி­லாக, போதைப்­பொருள் கடத்தல் சாத்தியம் குறித்து இந்­தோ­னே­ஷிய பொலி­ஸா­ருக்கு அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் இர­க­சிய தகவல் கொடுத்­தனர்.

9 தினங்­க­ளின்பின் 2005 ஏப்ரல் 17 ஆம் திகதி, இந்­தோ­னே­ஷி­யாவின் பாலி தீவி­லி­ருந்து அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்­கிச் செல்­வ­தற்­காக ஸ்கொட் ரஷ்ஷும் மேலும் நால்வரும் பாலி தீவின் டென்­பாஸர் விமான நிலை­யத்­திற்கு வந்­தனர்.

23F47F5800000578-2869230-image-a-12_1418271559130(No way back: Scott Rush, aged 19, at Denpasar Airport on April 17, 2005, as Bali police remove packages of heroin strapped to his body)

அப்­போது, அவர்­களின் உடலைச் சுற்றி ஹெரோயின் போதைப்­பொருள் பொதிகள் மறைத்­து­வைக்­கப்­பட்­டி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டு இந்­தோ­னே­ஷிய அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்­டனர்.

அன்ட்ரூ சான், செகாஜ், ரெனி லோரன்ஸ் எனும் பெண், மார்ட்டின் ஸ்டீபன்ஸ் ஆகி­யோரே ஸ்கொட் ரஷ்ஷுடன் கைது செய்­யப்­பட்ட ஏனைய மூவ­ராவர்.

இந்­நால்­வ­ரி­ட­மி­ருந்தும் 8.3 கிலோ­கிராம் ஹெரோயின் கைப்­பற்­றப்­பட்­டது. இதன் பெறு­மதி 31 இலட்சம் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும்.

23F47A6F00000578-2869230-image-a-9_1418271480392(The hotel room in a seedy Hong Kong district where Rachel Diaz, 17, and Chris Vo, 15, were preparing to swallow 114 heroin-filled condoms and make the eight-hour flight back to Sydney)

இந்­நால்­வரும் கைது செய்­யப்­பட்ட பின்னர், இந்­தோ­னே­ஷிய பொலிஸார் விடுதியொன்றில் மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்­பொன்­றின்­போது மயூரன் சுகு­மாரன், சீ யீ சென், டான் டுக் தான்ஹ் குயென், மத்­தியூ நோர்மன், ஆகியோர் கைது செய்­யப்­பட்­டனர்.

ஏற்­கெ­னவே கைது செய்­யப்­பட்ட நால்­வ­ரி­னதும் உடலில் ஹெரோயின் போதைப்­பொருள் பொதியை சுற்­றிக்­கட்­டு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­பட்டு டேப் மற்றும் எஞ்­சிய போதைப்­பொருள் ஆகி­ய­னவும் கைப்­பற்­றப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த 9 பேரும் அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்­த­வர்கள் இவர்­களே பாலி நைன் என சுருக்­க­மாக குறிப்பிடப்­பட்­டனர்.

அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜைகள் 9 பேர் போதைப்­பொருள் கடத்தல் குற்­றத்­துக்­காக கைது செய்­யப்­பட்­ட­வுடன் இவ்­வி­ட­யத்தில் அவுஸ்­தி­ரே­லிய பொலி­ஸாரின் பங்­க­ளிப்பு குறித்து சர்ச்சை எழுந்­தது.

போதைப் பொருள் கடத்தல் குற்­றத்­துக்கு மரண தண்­டனை விதிக்கும் நாட்­டிடம் தனது பிர­ஜைகள் 9 பேர் சிக்­கு­வ­தற்கு வழி­வ­குத்­த­தாக அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.

13.02.2006 ஆம் திகதி லோரன்ஸ், ஸ்கொட் ரஷ் ஆகி­யோ­ருக்கு ஆயுள் தண்டனை விதிக்­கப்­பட்­டது. மறுநாள் செகாஜ் மற்றும் ஸ்டீபன்ஸுக்கு ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

அன்ட்ரூ சான், மயூரன் சுகு­மாரன் ஆகி­யா­ருக்கு துப்­பாக்­கியால் சுட்டு மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட வேண்டும் என தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

டென்­பாஸர் மாவட்ட நீதி­மன்­றத்தில் விதிக்­கப்பட் முதல் மரண தண்­டனை தீர்ப்பு இதுவாம். இக்­கு­ழுவின் ஏனைய 3 அங்­கத்­த­வர்­க­ளான நோர்மன், சென், குயென் ஆகி­யோ­ருக்கு 15.02.2006 ஆம் திகதி ஆயுள்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

இவர்­களில் 7 பேருக்கு மேன்­மு­றை­யீ­டு­களின் பின், ஆயுள் தண்­டனை, மரண தண்­டனை, மீள ஆயுள் தண்­டனை என தீர்ப்­புகள் மாறி அளிக்­கப்­பட்­டன. இவர்கள் 7 பேருக்கும் இறு­தியில் ஆயுள் தண்­டனை அல்­லது 20 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

23ECD76D00000578-2869230-image-a-27_1418274501838ஆனால், குழுவின் தலை­வர்­க­ளாக கூறப்­பட்ட மயூரன் சுகு­மாரன் (இலங்கை தமி­ழர்­க­ளான பெற்­றோர்­க­ளுக்கு மக­னாக லண்­டனில் பிறந்து அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யே­றி­யவர்), அன்ட்ரூ சான் (இவர் சீன வம்­சா­ளியைச் சேர்ந்­தவர்) ஆகி­யோ­ருக்­கான மரண தண்­டனை குறைக்­கப்­ப­ட­வில்லை.

அதன்­பின்­னரே இவ்­வி­ரு­வ­ரையும் மரண தண்­ட­னை­யி­லி­ருந்து காப்­பாற்ற வேண்டும் என கடந்த பல வரு­டங்­க­ளாக கோசங்கள் எழுப்­பப்­பட்டு வந்­தன.

 தமது குற்­றச்­செ­யல்­களை ஒப்­புக்­கொண்­டி­ருந்த மயூரனும், அன்ட்ரூ சானும் சிறை­யி­லி­ருந்­த­போது மிகவும் திருந்­தி­ய­வர்­க­ளாக காணப்­பட்­டனர்.

ஏனைய கைதி­க­ளுக்கு, கணினி, ஆங்­கிலம் போன்­ற­வற்றை கற்­பித்தும் வந்­தனர். அவர்­களை சிறைக்குள் சமூக தலை­வர்­க­ளாக சிறை­ய­தி­கா­ரிகள் நிய­மித்­தி­ருந்­தனர்.

சில வரு­டங்­க­ளுக்­குமுன் இவ்­விருவரும் அளித்த செவ்­வி­களில் தாம் கைது செய்­யப்­பட்­ட­மை­யா­னது தவ­று­களை உணர்ந்து திருந்­திக்­கொள்ள வாய்ப்பை ஏற்­ப­டுத்­தி­யது எனத் தெரி­வித்­தி­ருந்­தனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவில் கட­வுச்­சீட்டு அலு­வ­ல­கத்­திலும் பின்னர், தபால் அலு­வ­ல­கத்­திலும் பணி­யாற்­றி­யவர் மயூரன் சுகு­மாரன், விரை­வாக பணம் சம்­பா­திப்­ப­தற்­காக ஆசைப்­பட்டு இந்த போதைப்­பொருள் கடத்தல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட தாம் தீர்­மா­னித்­தாக கூறினார்.

பி.எம்.டபிள்யூ. பென்ஸ், அழ­கிய பெண்கள்

இரவு விடு­தி­க­ளுக்குச் செல்­ப­வர்கள், அழ­கான பி.எம்.டபிள்யூ, மேர்­சிடிஸ் கார்­களை வைத்­தி­ருக்­கி­றார்கள், அவர்கள் அழ­கான பெண்­க­ளுடன் இருக்­கின்­றனர். நானும் கார் வாங்க வேண்டும் என விரும்­பினேன்” என மயூரன் சுகு­மாரன் 2010 ஆம் ஆண்டு தெரி­வித்­தி­ருந்தார்.

திருந்­தி­விட்ட தம்மை கொல்­லாமல் உயிர்­வாழ அனு­ம­திக்க வேண்டும் என்­பதே இவ்­வி­ரு­வ­ரி­னதும் கோரிக்­கை­யாக இருந்­தது.

இவர்­களை விடு­விப்­ப­தற்­காக அவுஸ்திரேலிய பிர­தமர் டோனி அபோட் உட்­பட பலரும் கோரினர். இந்­தோ­னே­ஷிய சிறை அதி­கா­ரி­க­ளுக்­கு­கூட இவர்­களின் மரண தண்­ட­னையை குறைப்­பதில் ஆட்சேபம் இருக்­க­வில்­லையாம்.

ஆனால் இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி, ஜோகோ விடோடோ விடாப்­பி­டி­யாக இருந்தார். போதைப் பொருள் பயங்­க­ரத்­துக்கு எதி­ராக இந்­தோ­னே­ஷியா போரா­டு­வ­தாக கூறிய அவர், போதைப் பொருள் குற்­ற­வா­ளி­க­ளுக்கு மன்­னிப்­ப­ளிக்க தான் தயா­ரில்லை என்றார்.

அதை­ய­டுத்து, கடந்த புதன்­கி­ழமை அதி­காலை மயூரன் சுகுமாரன், அன்ட்ரூ சான், உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மௌனம் கலையும் அவுஸ்­தி­ரே­லிய பொலிஸார்

127817138-bec153f8-a831-11e4-b4a3-9d4f296075c1மயூ­ர­னுக்கும் அன்ட்ரூ சானுக்கும் மரண தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டமை அவுஸ்­தி­ரேலி­யர்­க­ளுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இந்­நி­லையில் பாலி நைன் விவ­கா­ரத்தில் அவுஸ்­தி­ரே­லிய சமஷ்டி பொலி­ஸாரின் பங்­க­ளிப்பு வெளிப்ப­டுத்­தப்­பட வேண்டும் என கோரிக்­கைகள் எழுந்­துள்­ளன.

இது தொடர்­பாக அவுஸ்­தி­ரே­லிய நாடா­ளு­மன்ற விசா­ரணைக் குழுவின் முன்­னி­லையின் அவுஸ்­தி­ரே­லிய சமஷ்டி பொலிஸார் விளக்­க­ம­ளிக்க வேண்டும் என நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்குமுன் இவ்விடயம் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிப்பதற்கு முன்னர் அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸார் மறுத்திருந்த போதிலும், விரைவில் இது தொடர்பான செய்தியாளர் மாநாடொன்றை நடத்தவுள்ளதாக அவுஸ்திரேலிய சமஷ்டி பொலிஸ் பேச்சாளர் ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

 

மயூரன், சான் உட்பட 8 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது

479416-5083d8c6-a1f5-11e4-acaf-e0674697f2ed

Share.
Leave A Reply