உல­கி­லேயே அதி பயங்­க­ர­மான இயக்கம் இதுதான் என்று சொல்­லப்­படும் ஐ.எஸ்.இன் தலைவர் அல்பக்­தாதி இறந்­து­விட்­டாராம்…

இந்தச் செய்­தியை முதலில் சொன்­னது ஈரான் நாட்டு ஒரு வானொ­லியாம். அதன்­பி­றகு பல சர்­வ­தேச ஊட­கங்­களும் இதே செய்­தியை வெ ளியிட்­டி­ருந்­தன.

ஆனால் இது பற்றி ஐ.எஸ்.ஸோ இன்றும் வாய் திறக்­க­வில்லை.

அமெ­ரிக்க விமான குண்டு வீச்சில் படு­காயம் அடைந்த ஐ.எஸ். இயக்க நிறு­வுனர் அல் பக்­தாதி அதன்பிறகு உயி­ரி­ழந்­த­தா­கத்தான் சொல்­கி­றார்கள்.

ஈராக், சிரியா ஆகிய நாடு­களை தள­மாக கொண்டு ஐ.எஸ். இயக்கம் இயங்கி வந்­தது. இன்னும் இயங்கிக்­கொண்­டி­ருக்­கி­றது.

அவர்கள் உலகின் பல நாடு­களில் வேரூன்றி உள்­ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடு­களில் ஆயுதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள ஐ.எஸ்.ஸுக்கு எதி­ராக, அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­டுப்­படை போரிட்டு வரு­கி­றது.

இந்­நி­லையில், ஈராக்கில் கடந்த மாதம், அமெ­ரிக்க கூட்­டுப்­ப­டைகள் நடத்­திய வான்­வழி தாக்­கு­தலில் ஐ.எஸ். இயக்க நிறு­வுனர் அபூ பக்கர் அல் பக்­தாதி படு­காயம் அடைந்­த­தாக செய்­திகள் வெளி­யா­கின.

இங்­கி­லாந்து நாட்டு பத்­தி­ரிகை ஒன்று இச்­செய்­தியை வெளி­யிட்­டி­ருந்­தது.

ஈராக் அரசு ஆலோ­சகர் ஹிஷாம் அல்–­ஹ­ஷிமி என்­ப­வரும் இச்­செய்­தியை உறு­திப்­ப­டுத்­தினார். கடந்த மாதம் 18ஆம் திகதி, சிரிய எல்­லையை ஒட்­டி­யுள்ள அல்–பாஜ் கிரா­மத்தில் ஒரு குழு­வுடன் தங்கி இருந்த­போது, அமெ­ரிக்க கூட்­டுப்­படை தாக்­கு­தலில் அல் பக்­தாதி படு­காயம் அடைந்­த­தாக அவர் கூறினார்.

தொடக்­கத்தில், அல் பக்­தா­தியின் உயி­ருக்கு ஆபத்­தான அள­வுக்கு காயம் இருந்­தது. ஆனால், அப்போதிருந்து அவர் மெல்ல மெல்ல குண­ம­டைந்து வரு­கிறார்.

இருப்­பினும், ஐ.எஸ். இயக்­கத்தின் அன்­றாட பணி­களை நிர்­வ­கிக்கும் அள­வுக்கு அவர் இன்னும் தயா­ரா­க­வில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்­தது.

காயம் அடைந்து சிகிச்சை பெற்­று­வந்த அல்-­பக்­தாதி தற்­போது பலி­யா­கினார் என்று ரேடியோ ஈரான் அறி­வித்­தது.

ஆனால் எந்­த­ ஒரு செய்தி நிறு­வ­னத்­தாலும் இது உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

வெளியில் அதிகம் முகம் காட்­டாமல் இருந்த அல்–­பக்­தாதி ச மொசூல் நகர மசூ­தியில் நடந்த நிகழ்ச்சியில் கடந்த வருடம் முதல் முறை­யாக கலந்து கொண்டு பேசினார். முதல் முறை­யாக வெளியான அந்த வீடியோ, இணை­ய­த்த­ளத்தில் வெளி­யாகி பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

அமெ­ரிக்­காவால் தேடப்­படும் தீவி­ர­வா­தி­களின் பட்­டி­யலில் இருக்கும் முதல் நபர் அல்–­கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல்–­ஜ­வா­ஹிரி.

இரண்­டா­வது இடத்தில் இருப்­பவர் வேறு யாரும் அல்ல, ஈராக், சிரியா அர­சு­களின் கண்­களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்­டி­ருக்கும் அபூ­பக்கர் அல்-பாக்­தாதி தான்.

அடுத்த ஒசாமா பின்­லேடன் என்று அழைக்­கப்­ப­டு­கிறார் இவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்­கத்­துக்கு தலைமை தாங்­கிய 43 வய­தான அல்–­பக்­தாதி, பெரும்­பாலும் தனது முகத்தை அதி­க­மாக வெளிக்­காட்­டி­யது கிடை­யாது. தனது இயக்க தள­ப­திகள் மத்­தியில் பேசும் போது கூட முகத்தை மூடிக் கொண்­டி­ருப்­பாராம்.

இதனால் இவரை மாயாவி ஷேக் (‘இன்­வி­சிபிள் ஷேக்’) என்றும் கூறினர். ஈராக் தலை­நகர் பாக்தாத் அரு­கே­யுள்ள சமரா என்ற இடத்தில் கடந்த 1971ஆம் ஆண்டில் பிறந்த இவர், பாக்தாத் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்­றவர்.

அமெ­ரிக்க படைகள் ஈராக் மீது தாக்­குதல் நடத்­தி­யதை தொடர்ந்து, சில சிறிய தீவி­ர­வாத குழுக்­க­ளுக்கு அல்–­பக்­தாதி தலைமை தாங்­கி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

2006ஆம் ஆண்டு அமெ­ரிக்க இரா­ணு­வத்தால் கைது செய்­யப்­பட்ட அல்–­பக்­தாதி பின்னர் 2009ஆம் ஆண்டில் விடு­தலை செய்­யப்­பட்டார்.

osamaபக்கா என்ற இடத்தில் அமெ­ரிக்க இரா­ணுவ முகா­மிலும் சில­காலம் காவலில் வைக்­கப்­பட்டு இருந்தார். விடு­த­லைக்கு பிறகு ஒசாமா பின்­லே­டனின் அல்–­கொய்தா இயக்­கத்தில் சேர்ந்து பணி­யாற்­றினார்.

அல்–­கொய்தா தலைவர் பின்­லேடன் பாகிஸ்­தானில் உள்ள அபோ­தாபாத் நகரில் 2011ஆம் ஆண்டு மே 2ஆம் திகதி அமெ­ரிக்க படை­யி­னரால் கொல்­லப்­பட்­டது அந்த இயக்­கத்­துக்கு பேரி­டி­யாக அமைந்­தது.

இதனால் கொதித்து எழுந்த அல்–­பக்­தாதி, பழிக்­குப்­பழி வாங்கப் போவ­தாக அறி­வித்தார். அதன்­பி­றகு ஈராக்கில் நடந்த சில தாக்­கு­தல்­க­ளுக்கு அவ­ரது தலை­மை­யி­லான குழு பொறுப்பு ஏற்­றது அதை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­தது.

எதி­ரி­களை கொடூ­ர­மாக தாக்கி கொல்­வ­தோடு அவர்­க­ளுக்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­த­வேண்டும் என்ற அதிப­யங்­கர போக்கை கொண்­டவர் அல்–­பக்­தாதி.

imagesஅல்–­ஜ­வா­ஹி­ரி

இதனால் இவ­ருக்கும், பின்­லே­டனின் மறைவை தொடர்ந்து அல்–­கொய்­தாவின் தலைமை பொறுப்பை ஏற்ற அல்–­ஜ­வா­ஹி­ரிக்கும் இடையே கருத்து வேறு­பாடு ஏற்­பட்­டது.

பிளவு அதி­க­ரிக்­கவே, அல்–­ஜ­வா­ஹி­ரியை பின்­பற்றப் போவது இல்லை என்றும், இறை­வனின் கட்டளையை பின்­பற்றி நடக்­கப்­போ­வ­தா­கவும் அறி­வித்த அல்–­பக்­தாதி, ஈராக்­கையும், சிரி­யா­வையும் ஒருங்கிணைத்து புதிய இஸ்லாமிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற இயக்கத்தை தொடங்கினார்.

தற்போது இந்த இயக்கத்திடம் ரூ.24 ஆயிரம் கோடிக்கு மேல் பணமும், சொத்துகளும் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. உலக நாடுகளுக்கு பெரிதும் அச்சத்தை ஏற்படுத்திய இயக்கம் ஐ.எஸ்.ஐ.எஸ். தான்.

அல்-பாக்தாதி உயிரிழப்பு அமெரிக்க படைக்கு முன்னேற்றம் என்றே கூறப்படுகிறது.

அல்பக்தாதி உயிரிழந்தது உண்மைதானா? என்பது பெரிய கேள்விக்குறி.

ஒருவேளை ஐ.எஸ். தலைவர் இறந்திருந்தால் அந்த அமைப்பின் நடவடிக்கைகள் கொஞ்சம் பயங்கரமாகத்தான் இருந்திருக்கும்.

காரணம் சாதாரணமாகவே பயங்கரச் செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் தலைவனை கொன்றுவிட்டார்கள் என்றால் அவர்கள் சும்மா இருந்துவிடுவார்களா என்ன-?

-எஸ்.ஜே.பிரசாத் –

(முன்னைய பதிவுகளை பார்வைிட  இ்ங்கே அழுத்தவும: எரிந்து கொண்டிருக்கின்றது எண்ணொய் பூமி)

Share.
Leave A Reply