மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடிப் பாலத்திலிருந்து வாவிக்குள் குதித்த இளைஞர், இன்று சனிக்கிழமை(02) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கல்லடி டச்பார் வீதிப்பக்கமாகவுள்ள வாவியிலிருந்து இவரின் சடலம் மீகப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு திருச்செந்தூர் 2ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த ஞானமணி விஜித்திரகுமார் (வயது 22) என்ற இளைஞரே கல்லடி, நேற்று வெள்ளிக்கிழமை மாலை வாவிக்குள் பாய்ந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மத்திய கிழக்கு நாடொன்றுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றிருந்த இந்த இளைஞர் இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் நாடு திரும்பியிருந்தார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தாயின் மூக்கை உடைத்த மகள் : ஆனமடுவவில் சம்பவம்
02-05-2015
மகளின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த தாய் ஆனமடுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,
தாயும் மகளும் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது தாய்க்கும் மகளுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.
இதன்போது மகள் தனது கையிலிருந்த தேனீர் கோப்பையினால் தாயை தாக்கியுள்ளார். இதனால் தாயின் மூக்கு உடைந்து அவர் ஆனமடுவ வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இடம்பெற்று மூன்று தினங்களின் பின்னர் சந்தேக நபரான யுவதி ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் ஆனமடுவ பொலிஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.