நேபாள நிலநடுக்கத்தில் ,பல மணி நேரம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட 4 மாத குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிலநடுக்கத்தால் பாதிப்புக்குள்ளான நேபாள தலைநகர் காத்மாண்டு அருகே பக்தபூர் பகுதியில் சில வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, குழந்தையின் அழுகுரல் வீரர்களுக்கு கேட்டது.  இதையடுத்து, அந்த பகுதியில் வீரர்கள் மீட்புப் பணியை துரிதப்படுத்தினர். அப்போது, இடிபாடுகளுக்குள் சிக்கி  கிடந்த குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.

sonithபிறந்து 4 மாதமே ஆன அந்த குழந்தைதையை மண்ணுக்குள் இருந்து வெளியே எடுத்தபோது அது வீறிட்டு அழுதது.

வீரர்கள் அந்த குழந்தையை சமாதானப்படுத்தி உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் அந்த குழந்தையின் பெற்றோரைத் தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டனர். இந்நிலையில் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டு முகாம் ஒன்றில் தங்கியிருந்த குழந்தையின் பெற்றோரை மீட்புப்படையினர் கண்டுபிடித்தனர்.

அந்த குழந்தையின் பெற்றோர்  ஷ்யாம் அவால் – ரேஸ்மிலா தம்பதியினர் என்று கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் குழந்தையை ஒப்படைக்கப்பட்டது.

soniதங்கள் குழந்தை உயிரோடு இருக்காது என்று எண்ணி அழுது புலம்பிக் கொண்டிருந்த ஷ்யாம்- ரேஸ்மிலா தம்பதிகளுக்கு தங்கள் 4 மாத குழந்தை உயிரோடு கொண்டு வரப்பட்டதை பார்த்து எல்லையில்லா ஆனந்தம் அடைந்தனர்.

அவர்கள் கண்ணீர் மல்க குழந்தையை மீட்புப்படையினரிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். தாயை கண்ட குழந்தை சிரிப்புடன் அவரிடம் தாவிக் கொண்டது.

குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது குறித்து பெற்றோர் கூறுகையில், எங்கள குழந்தை மீண்டும் கிடைத்து விட்டான்.

இந்த உலகிலேயே நாங்கள்தான் மகிழ்ச்சியான தம்பதிகள். ஆனால் என்னால் இதனை இப்பவும் நம்ப முடியவில்லை என்றனர்.

மீட்கப்பட்ட குழந்தை சோனித்துக்கு ஒரு மூத்த சகோதரி உண்டு.

Share.
Leave A Reply