ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை சிறுமியின் பிறப்பு உறுப்பில் சூடு வைத்து சித்திரவதை செய்த அச்சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கை மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் ரோபின் வயது 42. இவர், இறந்துவிட்ட தனது முதல் மனைவிக்கு பிறந்த 6 குழந்தைகள் மற்றும் 2வது மனைவியுடன் 10 ஆண்டுகளுக்கு முன்பு அகதியாக வந்து மண்டபம் முகாமில் தங்கி உள்ளார்.

குடிப்பழக்கம் உள்ள ரோபின், போதையில் தனது 10 வயது மகளை தினமும் அடித்து சித்ரவதை செய்துள்ளார். சிறுமியின் தொடை, பிறப்பு உறுப்பில் சூடு போட்டுள்ளார்.

படுகாயமடைந்த சிறுமி ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையில், போதையில் ரோபின் மண்டபம் முகாமில் உள்ளவர்களிடம் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அகதிகள் ரோபினையும், அவரது 2 வது மனைவியையும் கைது செய்யக்கோரி, மண்டபம் முகாமிற்குள் கோஷமிட்டனர்.

ராமேஸ்வரம் மகளிர் பொலிஸார் ரோபினை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Share.
Leave A Reply