மட்டக்களப்பு ஆரையம்பதி  செல்வா நகரில்  கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி இடம்பெற்ற இரட்டை கொலையுடன் தொடர்புடைய நபரென பொலிஸாரால் தேடப்பட்டுவந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் இன்று அதிகாலை காத்தான்குடி பொலிஸாரினால் ஆரையம்பதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

ஆரையம்பதியைச் நேர்ந்த நாகமணி ஜெகன் அல்லது ஜெகதீஸ்வரன் என்ற முன்னாள் புலி உறுப்பினரே பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இவர் குறித்த வீடொன்றினுள் புகுந்து ரீ.56 ரக துப்பாக்கியால் சுட்டும் கைக் குண்டுகளை வீசியும் இருவரை கொலை செய்ததுடன் மேலும் எட்டுப்பேரை படுகாயமடைய செய்திருந்தமை  குறிப்பிடத்தக்கது.

மரணமானவர்கள் டெலோ இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் படுகாயமடைந்தவர்கள் அவர்களது உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேக நபர் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.பீ.வெதகெதர தெரிவித்தார்.

காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply