இளைஞர்கள் கைப்பேசிகளை பயன்படுத்தி கொண்டே சாலையில் செல்வதால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவு சுவிஸ் அதிகாரிகள் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.

சாலையில் கவன குறைபாடுடன் செல்வதால் நேரும் ஆபத்தினை விளக்கும் “The Magic Trick” எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோவினை, Lausanne நகர பொலிசார் கடந்த செவ்வாய் கிழமையன்று வெளியிட்டுள்ளனர்.

black-humor முறையில் எடுக்கப்பட்டுள்ள அந்த வீடியோ, நபர் ஒருவர் கதை சொல்வது போல் தொடங்குகிறது.

அந்த நபர், ஜோனஸ் என்ற 24 வயது இளைஞர் கதாபாத்திரம் பற்றி கதையில் கூறுகிறார்.

அந்த கதையில் அவர் கூறுகையில், ஜோனஸ் சாலையில் போக்குவரத்து அதிகமாக இருக்கும் போது கூட எப்போதும் இசையை கேட்டுக்கொண்டே  தனது நண்பர்களுடன் குறுஞ்செய்தி அனுப்பி பேசுவதை மிகவும் விரும்புவான்.

ஜோனஸிடம் எந்த மந்திர சக்தியும் இல்லை, ஆனாலும், இப்போது அவன் திடீரென்று சாலையில் இருந்து மறைந்து நம்பமுடியாத சாகசத்தை நிகழ்த்தப்போகிறான் என்று கதை கூறும் நபர் கூறுகையில், அந்த இளைஞர் மீது சாலையில் செல்லும் வாகனம் ஒன்று மோதி தூக்கி எறியப்படுகிறான்.

இதையடுத்து, நீங்கள் பார்த்தீர்களா? ஜோனஸ் இனி இல்லை, என்று அந்த கதை சொல்லும் கிண்டலாக சொல்கிறார்.

மேலும், நீங்களும் இந்த வித்தையை செய்ய விரும்பினால், உங்களுக்கு தேவையானது எல்லாம் ஒரு கைப்பேசி, சில பாடல்கள், குறுஞ்செய்தி அனுப்பும் செயலி இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறிய அளவில் கொஞ்சம் கவன குறைபாடு என்று கூறுவதாக அந்த வீடியோ அமைந்துள்ளது.

சுவிஸில் கடந்த 2013ம் ஆண்டில், சுமார் 1100 பேர் கவன குறைபாட்டினால் சாலையில் பயங்கர காயமடைந்ததாக இந்த பிரச்சாரத்தின்  மூலம் Lausanne நகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்ட இந்த வீடியோ பல்லாயிரம் மக்களால் பார்க்கப் பட்டுள்ளதோடு பேஸ்புக்கில் பலரால் பகிரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply