மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் முகேஷ்(40). அவரது மனைவி சுமித்ரா(35). அவர்களுக்கு லலித்(16), மகேந்திர அஹிர்வார், சுரேந்திரா(10) ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இது குறித்து கிருஷ்ணன் கூறுகையில், நான் மகேந்திரனை பரிசோதனை செய்துள்ளேன். அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.
அது முடிந்த பிறகு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து கழுத்தை நேராக்குவேன். தலைகீழாக இல்லாமல் இந்த உலகை நேராக அவர் பார்க்க நான் உதவி செய்வேன் என்றார்.
கிருஷ்ணன் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்தாலும் மருத்துவமனை மற்றும் மருந்து செலவுகளை மகேந்திராவின் பெற்றோர் தான் கவனிக்க வேண்டும். ஏழ்மையில் வாடும் அவர்களால் இது முடியாததாக உள்ளது.
இந்த சிறுவனின் பெற்றோர் வறுமையில் வாடியதால் அவனது சிகிச்சைக்காக உலகெங்கும் உதவி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் மகேந்திராவின் நிலைமை குறித்து அறிந்த இங்கிலாந்தில் உள்ள லிவர்பூலைச் சேர்ந்த ஜூலி ஜோன்ஸ் என்ற பெண் ஆன்லைன் மூலம் ரூ.10 லட்சம் நிதி திரட்டியுள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள மருத்துவமனையில் இந்த சிறுவன் சிகிச்சை பெற்று குணப்படுத்தப்பட்டுள்ளான்.
அத்துடன், முதுகு அறுவை சிகிச்சை நிபுணரான ராஜகோபாலன் கிருஷ்ணன் என்பவர், சிறுவனது உடல்நலத்தை மேலும் தேற்றுவதற்கு தம்மால் முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தனது மகனுக்கு உதவ முன்வந்துள்ள டாக்டர் மற்றும் பிற தயாள குணம் உள்ளவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக மகேந்திராவின் தந்தை தெரிவித்துள்ளார்.