பிரஸ் மீட்டுகளில் வடிவேலு பேசுவதை அப்படியே ஒளிப்பதிவு செய்து முழுமையாக வெளியிட்டால் போதும்.. அவர் படத்தின் காமெடியை விட அமோகமாக ரசிக்கப்படும் அந்த வீடியோ.
அப்படியொரு கலகலப்பு நிறைந்த சந்திப்புகள் அவை. நேற்று எலிக்காக அவர் செய்தியாளர்களைச் சந்தித்ததும் அப்படி ஒரு கலகலப்பு மிக்கதாகவே அமைந்தது.

எடக்கு மடக்காக வரும் கேள்விகளையும் ரொம்ப லாவகமாக நகைச்சுவையாக்குவது வடிவேலு ஸ்பெஷல்.நேற்றைய சந்திப்பின்போது அவரிடம், புலி படத்தின் வசூலை மிஞ்சுமா உங்க எலி படம் என்று ஒருவர் கேட்க, அதற்கு அவர் அளித்த பதில்தான் மேலே தலைப்பில் படித்தது.

வடிவேலு கூறுகையில், ‘ஏன்.. நல்லாத்தானே போயிட்டிருக்கு.. எதுக்கு இந்த கேள்வி? என்றவர், அடுத்து இப்படிச் சொன்னார் ஒருத்தன் புலின்னு எடுக்கறான்.. இன்னொருத்தன் சிங்கம்னு எடுக்கறான்… நான் எலின்னு எடுத்துக்கிட்டிருக்கேன்.

அது ஒரு பக்கம் ரிலீசாகட்டும்… எலி இந்தப் பக்கமா ஓடிட்டுப் போகட்டும் விடுங்கண்ணே… புலிக்கும் இதுக்கும் போட்டியெல்லாம் இல்ல… ஏன், அடுத்து கரப்பான் பூச்சின்னு கூட டைட்டில் வைப்போம்,” என்றார்.

Share.
Leave A Reply