யாழ்ப்பாணம் கோப்பாய் சந்தியில் இலங்கை போக்குவரத்து சபை பேரூந்தும் ஓட்டோவும் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டோவின் சாரதி உட்பட மூவர் கோப்பாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்தவரான திருகோணமலையைச் சேர்ந்த அன்ரனி யூட் பிரகாஸ் என்ற 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்தும் கைதடி வீதியில் இருந்து பருத்தித்துறை வீதியில் ஏற முற்பட்ட ஓட்டோவுமே மோதி விபத்துக்குள்ளாகின.