ஏற்கனவே வெளியான புகைப்படத்தில் பாலகுமாரனின் முகத்தில் பெரும் கலவரம் தெரிந்தது. இந்த புகைப்படத்தில் அவர் ஓரளவு இயல்பான நிலையில் இருப்பதாக தெரிகிறது.
இதனால், கைது செய்யப்பட்டு நீண்டநேரத்தில் பின்னர் இந்தபடம் பிடிக்கப்பட்டுள்ளதாக தோன்றுகிறது.
இந்த படத்தில் பாலகுமாரன் மற்றும் அவரது மகன் தவிர்ந்த இன்னொருவரும் உட்கார்ந்திருக்கிறார். பாலகுமாரனை தாம் கைது செய்யவில்லையென படைத்தரப்பும், இராணுவமும் திரும்பத்திரும்ப கூறிவரும் நிலையில் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த படம் மைத்திரி அரசை நிச்சயம் நெருக்கடியில் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பத்திரிகையாளர் இசைப்பிரியாவுடன் கொலை செய்யப்பட்ட உஷாலினியின் படங்களையும் ஹரிசன் வெளியிட்டுள்ளது உலகத் தமிழர்களிடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டு மே 18-ந் தேதி முள்ளிவாய்க்காலில் தமிழீழ தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள், தளபதிகள் மற்றும் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்தனர்.
 அத்துடன் எங்கே பாலகுமாரனும் அவரது மகனும் என்ற தலைப்பில் கேள்வியும் எழுப்பியுள்ளார். மேலும் தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் செய்தியாளரான இசைப்பிரியாவைப் போலவே சிங்கள ராணுவத்தால் உயிரோடு கைது செய்யப்பட்டு சீரழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட உஷாலினியின் புகைப்படங்களையும் பிரான்சிஸ் ஹரிசன் இன்று வெளியிட்டுள்ளார். பிரான்சிஸ் ஹரிசனின் இந்த புதிய படங்கள் உலகத் தமிழர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.