 ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் ஜாஸ்மினுக்கும் ஜாஸ்பருக்கும் மிக ஆடம்பரமாகத் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. பக் இன நாய்களான ஜாஸ்மினும் ஜாஸ்பரும் கடந்த 7 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர்.

ஜாஸ்மினின் திருமண ஆடை ஒண்ணே கால் லட்சம் ரூபாய். இந்தத் திருமணத்துக்கு 300 பேர் வந்திருந்தனர்.
மனிதர்களின் திருமணங்களைப் போலவே இந்தத் திருமணத்திலும் திருமண கேக் வெட்டப்பட்டது. விருந்தும் நடைபெற்றது.
 திருமணத்தில் கலந்துகொள்பவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. தங்களின் செல்லப்பிராணிகளுக்கு அலங்காரமான ஆடைகளை அணிவித்து அழைத்து வந்திருந்தனர்.

திருமணத்துக்கு வந்த பரிசுப் பொருட்கள், நன்கொடைகள் அனைத்தும் விக்டோரியா நாய்கள் பாதுகாப்பு அமைப்புக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பின் மூலம் மீட்கப்பட்ட ஜோடிகள்தான் ஜாஸ்மினும் ஜாஸ்பரும்.