ஒன்பது சந்தேக நபர்களில் ஒருவரைப் பிடித்த மக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் தாக்குதல் உக்கிரம் அடைந்ததால் அவ்விடத்தில் நின்ற பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் காப்பாற்றப்பட்டு காவல் துறையிடம் கையளித்தமை குறிப்பிடத் தக்கது.
புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் அழைத்துச் சென்ற போது…(வீடியோ)
புங்குடுதீவு மாணவியின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் பாரிய ஆர்பாட்டம்!
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இவர் வழக்கறிஞர் ஒருவரூடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவர் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்து வித்தியா கொலை வழக்கில் சிக்கி இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆர்ப்பாட்டம் செய்யும் பொதுமக்களை பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சமாதானம் செய்து வருகின்றார்.
புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பத்தையடுத்து வன்முறைகள் அதிகரித்திருந்த நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்பட்ட சமாதான முயற்சிகள் குழப்ப நிலையில் உள்ளது