15 வயதுச் சிறுமியொருவரை கடத்தி சென்று குடும்பம் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.
மீராவோடை பரிகாரியார் வீதியை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு கடத்தி செல்லப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே இளைஞன் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த சிறுமி அந்த இளைஞனால் அழைத்துச் செல்லப்பட்டு 9 நாட்கள் குடும்ப வாழ்க்கை நடத்தியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதன் பின்னர் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த யுவதியை பரிசோதித்து வைத்திய அறிக் கையை பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.