புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையிட்டு வடக்கு, கிழக்கில் பெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பேரணிகள், பகிஷ்கரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.
இதனால் தனியார் பஸ் சேவை மற்றும் வடமாகாணத்தில் உள்ள சகல அரச தனியார் நிறுவனங்கள் வர்த்தக நிலையங்கள் மூடிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேள காலையிலேயே கோண்டாவில் போக்குவரத்துச் சபைக்கு முன்னால் ரயர்களைப் கொழுத்தியதன் காரணமாக அங்கிருந்து எந்த பஸ்களும் யாழ். பஸ்நிலையத்திற்கு வரவில்லை.
அத்துடன் பருத்தித்துறை காரைநகர் பகுதிகளுக்கான பஸ் சேவை இடம்பெறுகின்றன. எனினும் அவர்கள் அச்சத்துடனே சேவையில் ஈடுபடுகின்றனர். ஒரு சில மணித்தியாலங்களில் இந்த பஸ்சேவைகளும் முடங்கும் நிலையுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெளிமாட்ட பஸ்களும் நிறுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் உயர் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க சேவையில் ஈடுபடுகின்றன.
வெளிமாவட்டத்திலிருந்து ரயில் மற்றும் பஸ்களில் வந்தவர்கள் சொந்த இடங்களுக்கு செல்ல பெரும் சிரமத்துக்குள்ளாகி முச்சக்கரவண்டியிலேயே செல்கின்றனர்.