என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை. காரணம், நான் துஷாரியை நம்பித்தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன்

 இனி நான் வாழ அரு­க­தை­யற்­றவன் தான். ஒரு பெண் என்று கூட பார்க்­காமல் துஷா­ரியைக் கொலை செய்து விட்டேன்.

அன்று வாரத்தின் கடைசி நாள். நானும் துஷா­ரியும் சேர்ந்து பழக்கடையின் கணக்கு வழக்­கு­களைச் சரி பார்த்­துக்­கொண்­டி­ருந்தோம். அப்­போது துஷாரி கார­ணமே இல்­லாமல் என் மீது கோபப்­பட்டாள்.

அன்று எனக்கு உண்ண உணவு பரி­மா­றா­மலே அவள் மட்டும் தனி­யாகச் சாப்­பிட்டாள். பின் என்­னிடம் வந்து எங்கள் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான உறவு முறிந்து விட்­டது.

என்னால் கடையை தனி­யாகக் கொண்டு நடத்த முடியும். இனி நீ இங்­கி­ருந்து போய்விடு. உன் மூச்சுக் காற்­றுக்­கூட என் மீது படக்­கூ­டாது என்று கூறினாள்.

அது­மட்­டு­மின்றி, வீட்­டுக்குச் சென்று உன்­னு­டைய துணி வகை­க­ளையும் எடுத்துக் கொண்டு சென்று விடு என்று கூறினாள். ஆனால், என்னால் அவ்­வ­ளவு சீக்­கி­ர­மாக துஷா­ரியை விட்டுச் செல்ல முடி­ய­வில்லை.

காரணம், நான் துஷா­ரியை நம்பித் தான் பெரு­ம­ள­வான பணத்தை பழக்­கடை வியா­பா­ரத்தில் முத­லீடு செய்­துள்ளேன். எனவே, நான் அவ­ளுடன் இது தொடர்­பாக முரண்­பட ஆரம்­பித்தேன்.

ஆயினும், அவள் கேட்­பதாய் இல்லை. இறு­தியில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுப் பழம் வெட்டும் கத்­தியை எடுத்து அவள் வயிற்றில் பல தட­வைகள் விடாமல் குத்­தினேன்.

வலி தாங்­காமல் சில மணி நேரங்கள் அவ்­வி­டத்­தி­லேயே துடி­து­டித்து இறந்­து­விட்டாள். அதன்பின் எனக்கு அவளைப் பார்க்க மன­துக்கு கஷ்­ட­மா­க­வி­ருந்­தது.

இருப்­பினும், தொடர்ந்து அவ்­வி­டத்­தி­லேயே நின்­று­கொண்­டி­ருந் தால் பொலி­ஸா­ரிடம் அகப்­பட்டு விடு­வேனோ? என்ற பயத்தில் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டினேன்” என்று பாணந்­துறை நக­ரத்தில் பழக்­கடை பெண் வர்த்­தகர் ஒரு­வரைக் கொலை செய்த சந்­தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய தனது வாக்­கு­மூ­லத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.

இச்­சம்­ப­வத்தில் பாணந்­துறை கிரன பிர­தே­சத்தைச் சேர்ந்த 45 வய­தான துஷாரி வாசனா விஜ­ய­ரட்ண என்ற மூன்று பிள்­ளை­களின் தாய் ஒருவர் உயி­ரி­ழந்­த­துடன், அவ­ருடன் இர­க­சிய உறவு முறை­களைப் பேணி வந்­தவர் என்று கூறப்­பட்ட 54 வய­தான வசந்த காமினி என்­பவர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இத­னைத்­தொ­டர்ந்து பாணந்­துறை பொலிஸார் நடத்­திய விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில் துஷாரி வாசனா விஜ­ய­ரட்ண பாணந்­துறை கிரன பிர­தே­சத்தை சேர்ந்­தவள்.

பல வரு­டங்­க­ளுக்கு முன் துஷாரி இரா­ணு­வத்தில் பணி­யாற்றி வந்த ஹேமந்­தவை (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) திரு­மணம் செய்து கொண்டாள்.

எனினும், அந்த வாழ்க்கை அவ­ளுக்கு நிரந்­த­ர­மாக அமை­ய­வில்லை. இளம் வய­தி­லேயே துஷா­ரியை மூன்று பிள்­ளை­க­ளுடன் விட்டு விட்டு இவ்­வு­லக வாழ்­வி­லி­ருந்து நிரந்­த­ர­மாகப் பிரிந்து விட்டார் ஹேமந்­த.

அதன்பின் பழ வியா­பா­ரமே அவ­ளு­டைய வாழ்க்­கையைக் கொண்டு நடத்­து­வ­தற்கு கைகொடுத்­தது. ஒரு தனி மனு­ஷியாய் அல்லும் பகலும் அய­ராது உழைத்து பிள்­ளை­களை வளர்த்து ஆளாக்­கினாள் துஷாரி.

இவர்­களில் மூத்த மகள் திரு­மணம் முடித்த கையோடு கண­வ­ருடன் துஷா­ரியின் வீட்­டி­லேயே தங்கிவிட்டாள். எனவே இரு மகன்­மார்கள், மகள், மரு­மகன் என்று துஷா­ரியின் குடும்பச் சக்­கரம் நகர்ந்தது.

இந்­நி­லையில் தான் பாணந்­துறை கிரன பிர­தே­சத்தில் துஷா­ரியின் பழக்­க­டை­யி­லி­ருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலை­வி­லி­ருந்த மருந்துகள் விற்பனை நிலையத்தின் உரி­மை­யா­ள­ரான வசந்த காமி­னியின் அறி­முகம் கிடைத்­தது.

வசந்த காமினி திரு­ம­ண­மாகி இரு பிள்­ளை­க­ளுடன் மனை­வியைச் சட்­ட­ரீ­தி­யாக விவா­க­ரத்து செய்து தனது இரு பிள்­ளை­க­ளுக்கும், மனை­விக்கும் ஜீவ­னாம்­ச­மாக மாதம் 18,000 ரூபாவைக் கொடுத்து வருபவன் ஆவான்.

ஆரம்­பத்தில் தனது உடலில் காணப்­பட்ட உபா­தை­யொன்­றுக்கு மருந்து வாங்­கு­வ­தற்­கா­கவே துஷாரி முதன்முதலில் வசந்­தவின் மருந்து விற்­பனை நிலை­யத்­துக்கு சென்­றி­ருக்­கின்றாள்.

அதன்பின் வசந்­தவின் வசீ­க­ர­மான பேச் சில் வெகு­வாகக் கவ­ரப்­பட்ட துஷாரி, அடிக்­கடி மருந்­து­களை வாங்­கு­வ­தற்கு வசந்­தவின் மருந்து விற்­பனை நிலை­யத்­துக்கே செல்­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்தாள்.

இந்­நி­லையில், துணையைப் பிரிந்து வாழ்ந்த இரு­வ­ருக்­கு­மி­டையில் புதி­ய­தொரு உறவு துளிர் விட ஆரம்­பித்­தது. துஷாரி பல மணி நேரங்­களை வசந்­தவின் மருந்து விற்­பனை நிலை­யத்தில் கழிப்­பதும், வசந்த பல மணி நேரங்­களை துஷா­ரியின் பழக்­க­டையில் கழிப்­ப­துமாய் இருந்­தார்கள்.

அது­மட்­டு­மின்றி, வசந்த துஷாரி சொல்­வ­தற்கெல்லாம் தலை­யாட்­டு­ப­வ­னா­க­வி­ருந்­த­துடன், நாளடைவில் துஷா­ரியே கதி­யென்று அவ­ளிடம் தஞ்­ச­ம­டைந்தான்.

தனது மருந்து விற்­பனை நிலை­யத்தை விட்டு விட்டு துஷா­ரி­யுடன் இணைந்து பழக்­க­டையை நடத்­தி­யது மட்­டு­மின்றி, வசந்த துஷா­ரியின் வீட்­டி­லேயே தங்­கினான்.

அதன்பின் இரு­வரும் திரு­மணம் செய்­யாமலே ஒரே வீட்டில் கணவன்,மனை­வி­யாக வாழ்ந்து வந்­தனர். இதனைத் துஷா­ரியின் பிள்­ளைகள் மூவரும் நன்கு அறிந்­த­வர்­க­ளா­க­வி­ருந்­தனர்.

இரு­வரும் அதி­காலை 4.30 மணிக்கு எழுந்து பழக்­க­டையை திறப்­ப­தற்­காக சென்று, இரவு 8 மணியளவில் தான் மீண்டும் வீட்­டுக்கு வரு­வார்கள்.

இரு­வ­ருக்கும் தேவை­யான உண­வினை மகன்­மார்கள் தான் வீட்­டி­லி­ருந்து கொண்டு வந்து கொடுப்­பார்கள். மேலும் வசந்த தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்­தி­ருந்த பணத்தை கொண்டு துஷா­ரியின் பழக்­க­டையை மேலும் சிறப்­பாக நடத்த உத­வினான்.

இருப்­பினும், நாட்கள் செல்லச் செல்ல துஷாரி கார­ணமே இல்­லாமல் வசந்த மீது கோபத்தைக் காட்டினாள்.

எனினும், அவள் ஏதோ மனக்­கு­ழப்­பத்தில் இருக்­கின்றாள் போலும் என்று பல சம­யங்­களில் வசந்த பொறுமை காத்தான்.

எனினும் துஷாரி மாறவே இல்லை. மென்மேலும் வெறுப்­பையும், கோபத்­தையும் வசந்த மீது கொட் டித் தீர்த்தாள்.

போலி­யாக மகன்­மார்கள் இரு­வ­ரையும் திட்­டு­வது போல் ஆரம்­பித்து, இறு­தியில் வசந்­தவை தான் நன்கு திட்டித் தீர்ப்பாள்.

இந்­நி­லையில், அன்று வாரத் தின் கடைசி நாள் சரி­யாக மே மாதம் 9ஆம் திகதி, இரவு 8.30 மணியிருக்கும்.

துஷா­ரியும், வசந்­தவும் சேர்ந்து கடையின் கணக்கு வழக்­கு­களை சரி பார்த்­துக்­கொண்­டி­ருந்­தார்கள். அப்­போது துஷாரி வழ­மையை விட சற்று அதி­க­மாக வசந்த மீது கோபப்­பட ஆரம்­பித்தாள்.

அது­மட்­டு­மின்றி, மிகுந்த பசி­யுடன் இருந்த வசந்­தவை பற்றி சற்றும் சிந்­திக்­காது தனி­யாக சாப்­பிட்டு விட்டு கெஷியர் நாற்­கா­லியில் அமர்ந்­து­கொண்டாள்.

பின் வசந்­த­விடம் ”தயவுசெய்து நீ இங்கு இருந்து சென்று விடு, என்னால் பழக்கடையில் தனி­யாக வியா­பாரம் செய்ய முடியும்.

இன்­றுடன் எங்கள் இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான உறவு முறிந்து விட்­டது” என்­றெல்லாம் கூறி­யுள்ளாள்.

ஆனால், வசந்­த­வினால் அவ்­வ­ளவு சீக்­கி­ர­மாக துஷா­ரியை விட்டுச் செல்ல முடி­யா­மை­யினால் தொடர்ந்து துஷா­ரி­யுடன் முரண்­பட்­டுள்ளான்.

எனி னும், துஷாரி எதற்கும் உடன்­ப­டா­மை­யினால், ஆத்­தி­ரத்தில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சன ­ந­ட­மாட்டம் இல்­லா­மை­யினால், பழம் வெட்டும் கத்­தியை எடுத்து கெஷியர் நாற்­கா­லியில் அமர்ந்திருந்த துஷா­ரியைக் குத்­து­வ­தற்குச் சென்றான்.

எனினும், துஷாரி அவ­னிடமிருந்து தப்­பித்­துக்­கொள்ள பல­வாறு முயற்­சித்த போது வசந்­தவின் கை விரல்­களில் ஒன்று முதலில் துண்­டிக்­கப்­பட்­டது.

இதனால் மேலும் ஆத்­தி­ர­ம­டைந்த வசந்த, துஷா­ரியை நிலத்தில் தள்ளி விட்டு கத்­தியால் பல தட­வைகள் ஓங்கி அவள் வயிற்றில் குத்தினான்.

அதன்பின் சில மணி நேரங்கள் துஷாரி வலியால் துடித்­த­வாறே இறந்து விட்டாள். எனவே, மேலும் அவ்­வி­டத்தில் நின்­று­கொண்­டி­ருந்தால், பொலி­ஸா­ரிடம் அகப்­பட்டு விடு­வேனோ என்ற பயத்தில் வசந்த பழக்­க­டையின் முன்­க­தவை உட்­பு­ற­மாகப் பூட்டி விட்டு,

துஷா­ரியின் கைய­டக்கத் தொலை­பே­சி­யையும் குப்பைக்கூடைக்குள் போட்டு விட்டு, கையோடு கொலைக்கு பயன்­ப­டுத்­திய கத்­தி­யையும் எடுத்துக் கொண்டு கடையின் பிற் புறக்­கதவு வழி­யாக வெளியில் வந்து பிற்புறக் கதவையும் பூட்­டி­விட்டு தன்­னு­டைய மருந்து விற்­பனை நிலை­யத்­தை வந்­த­டைந்தான்.

அதன்பின் கத்­தியை மருந்துகள் விற்­பனை நிலை­யத்தின் ஒரு மூலையில் ஒளித்து வைத்து விட்டு முதல் மனை­விக்கும், பிள்­ளை­க­ளுக்கும் கொடுப்­ப­தற்கென்று சேமித்து வைத்­தி­ருந்த 18,000 ரூபாவை எடுத்துக் கொண்டு பாணந்­துறை நக­ரத்தை வந்­த­டைந்தான்.

பின் அங்­கி­ருந்து அநு­ரா­த­பு­ரத்­தி­லுள்ள அவ­னு­டைய அண்­ணனின் வீட்­டுக்குச் சென்று நடந்த அனைத்­தையும் ஒன்று விடாமல் தன் அண்­ண­னிடம் கூறி­யுள்ளான்.

அதற்கு அவன் அண்ணன், “நீ செய்­தது பெரும் தவறு. தயவுசெய்து இங்கு இருக்­காமல் அநு­ரா­த­புர பொலிஸில் சென்று சர­ணடை. இல்­லை­யென்றால், நானே உன்னை பொலிஸ் நிலை­யத்தில் ஒப்­ப­டைப்பேன்” என்று கூறியுள்ளான்.

இதனால் பெரும் குழப்­ப­ம­டைந்த வசந்த அண்­ண­னுக்குத் தெரி­யாமல் கதிர்­கா­மத்­தி­லுள்ள நண்பர் ஒருவர் வீட்­டுக்குச் சென்று அங்கு ஒரு நாள் தங்­கி­யுள்ளான்.

இருப்­பினும், அவ­னு­டைய மனச்­சாட்சி அங்கும் அவனை நிம்­ம­தி­யாக இருக்க விட­வில்லை. எனவே, பொலி­ஸா­ரிடம் சர­ண­டைவோம் என்ற எண்­ணத்தில் வசந்த மீண்டும் அநு­ரா­த­புர நக­ரத்­துக்கு வந்த போதே பாணந்­துறை பொலி­ஸா­ரிடம் கையும் கள­வு­மாக அகப்­பட்டான்.

இதன்­போது துஷா­ரியின் பிள்­ளைகள் மூவரும் வழங்­கிய தக­வல்­களின் அடிப்­ப­டை­யி­லேயே பொலிஸார் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தனர்.

சம்­பவம் நடை­பெற்ற தின­மான 9ஆம் திகதி சனிக்­கி­ழமை வெகு நேர­மா­கியும் வழ­மை­யாக வீட்­டுக்கு வரும் தாய் துஷா­ரியும், வசந்­தவும் வீடு திரும்­பா­மை­யினால் பிள்­ளைகள் மூவரும் அவர்­க­ளு­டைய கைய­டக்கத் தொலை­பேசி இலக்­கத்­துக்கு அழைப்­பு­களை ஏற்­ப­டுத்­திய போதும் இரு­வரின் தொலை­பேசி இலக்­கத்­தி­லி­ருந்தும் “பாவ­னை­யா­ள­ரி­ட­மி­ருந்து பதில் ஏதும் கிடைக்­க­வில்லை” என்ற வாடிக்­கை­யாளர் சேவை நிலை­யத்தின் பதில் மட்­டுமே கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.

இதனைத் தொடர்ந்து துஷா­ரியின் மூத்த மகள் தன் கண­வனை பழக்­க­டைக்குச் சென்று பார்த்து வரு­மாறு அனுப்­பினாள்.

அவனும் வீ்ட்டிலி­ருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலை­வி­லுள்ள பழக்­க­டைக்குச் சென்று பார்த்த போது வழ­மைக்கு மாறாக கடையின் முன் கதவு உட்­பு­ற­மாக தாழ்ப்­பா­ளி­டப்­பட்­டி­ருந்­த­து டன், பின் கதவு வெளிப்­பு­ற­மாக பூட்­டப்­பட்­டி­ருந்­தது.

எனவே மாமியார் எங்­கா­வது பயணம் சென்­றி­ருக்க வேண்டும் என்று நினைத்­த­வாறு வீட்­டுக்கு வந்து தன் மனை­வி­யிடம் அங்கு கண்­ட­வற்றைக் கூறி­யுள்ளான்.

எனினும், அவளால் அதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை. எனவே, தன் தம்­பி­மார்­க­ளிடம் இது பற்றித் தெரி­விக்க, அவர்கள் இரு­வரும் பழக்கடையை திறந்து பார்க்கும் போது தாய் இரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் சடல மாகக் கிடந்துள்ளாள்.

இதனைத் தொடர்ந்து பாணந்துறை குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு அநுராதபுரத்துக்கு சென்று 3 நாட்கள் தங்கியிருந்து நடத்திய தேடுதலின் பயனாகவே 13ஆம் திகதி வசந்த காமினியை கைது செய்ய முடிந்தது.

தொடர்ந்து பாணந்துறை பொலிஸாரின் விசாரணையில் வசந்த காமினி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளதுடன், தொடர்ந்து 28ஆம் திகதி வரை விளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எது எவ்வாறாயினும், எத்தகைய பிரச் சினைகளாகவிருந்தாலும் இருவரும் சமரசமாகப் பேசி ஒருவரின் நிலையை இன்னுமொருவர் புரிந்துகொண்டிருந் தால், இன்று இத்தகையதொரு நிலைமை இருவருக்கும் ஏற்பட்டிருக்காது.

-வசந்தா அருள்ரட்ணம்-

Share.
Leave A Reply