வட அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள சிலி நாட்டில் உள்ள சாண்ட்டியாகோ நகரை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு கடந்த 41 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு பிரசவத்தின்போது, அவருக்கு பிறந்த குழந்தை இறந்துவிட்டதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் தெரிவித்தனர்.

இறந்த குழந்தையின் சடலமோ, இறப்புச் சான்றிதழோ அந்தப் பெண்னுக்கு வழங்கப்படாத நிலையில், ’நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்’ என அந்தப் பெண்ணும் அமைதியாக இருந்து விட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள டகோமா பகுதியில் ஒரு தம்பதியரின் தத்துப்பிள்ளையாக வளர்ந்து வந்த 40 வயது டிராவிஸ் டாலிவர் என்பவர் கடந்த ஆண்டு தனது உண்மையான பெற்றோரைப் பற்றிய தகவல்களை இன்டர்நெட் மூலமாக அலசிப்பார்த்து, தன்னைப் பெற்ற தாய் சிலி நாட்டில் இருப்பதாக அறிந்து கொண்டார்.

நெல்லி ரியெஸ் என்ற தனது தாயை உடனடியாக தொடர்பு கொண்ட டிராவிஸ் டாலிவர், அவரை நேரில் காண ஆசைப்படுவதாக தெரிவித்தார்.

தாயாரும் தனது ஆவலை வெளிப்படுத்த, சாண்டியாகோ நகருக்கு சென்ற டிராவிஸ், விமான நிலையத்தில் அவரிடம் தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

ஆங்கில மொழி அறியாத நெல்லி ரியெஸ், அவர் கூறுவது என்னவென்று புரியாமல் 41 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல்போன் மகனை கட்டித்தழுவிக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.

’இனி உன்னை பிரியவே மாட்டேன். நீ எப்போதும் என்னோடுதான் இருக்க வேண்டும்’ என்று தாயார் சிலி மொழியில் கூறியது முழுமையாக புரியாதபோதிலும், அந்த உணர்வை மட்டும் புரிந்துகொண்ட டிராவிஸ் டாலிவர், கண்ணீருடன் ‘சம்மதம்’ என்பதுபோல் தலையசைத்து வைத்தார்.

உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமயமான மீதி காட்சிகள் இங்கே..

Share.
Leave A Reply