யாழ்ப்பாணம், நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் 13 வயதுடை சிறுமி ஒருவர், 23 வயதுடைய இளைஞர் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும், தந்தையும் பிரிந்து தனது பாட்டியுடன் யாழ்ப்பாணம் நாரந்தனை வடக்கு தம்பாட்டி பகுதியில் வசித்து வந்த 13 வயதுடைய சிறுமியை அப் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபரே இவ்வாறு தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இது தொடர்பில் சிறுமியின் பாட்டிக்கு தெரியவந்ததையடுத்து சிறுவர் பாதுகாப்பு சேவையின் அவசர இலக்கத்துக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து சிறுவர் பாதுகாப்பு சேவையினர், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதன் பின்னர் சிறுமியை உடனடியாக மீட்டு சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய சிறுமி மீட்கப்பட்டு சட்ட வைத்தியதிகாரியின் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபர், தலைமறைவாகியுள்ளதாகவும் அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 55வயதுடைய நபர் கைது
27-05-2015
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரசேத்தில் பத்து வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 55 வயதுடைய சந்தேக நபரை காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஒல்லிக்குளம் பிரசேத்தைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரின் வீட்டிற்கு முன்னாள் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டுக்குள் அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
சிறுமி கூக்குரலிட்டு அழுது கதவை திறந்து கொண்டு ஓடிச் சென்று தாயிடத்தில் சம்பவம் தொடர்பில்கூறியதையடுத்து அயலவர்கள் காத்தான்குடி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிசார் சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு சிறுமியை மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் அனுமதித்துள்ளனர்.
புகையிரதத்தில் மோதுண்டு இளைஞன் பலி..!
27-05-2015
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவுநேர கடுகதி புகையிரதத்தில் மாவடிவேம்பு பிரதேசத்தில் மோதுண்டு இளைஞன் ஒருவன் உயிரிந்துள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப்படையில் தொழில் புரியும் மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய செல்வம் மகேந்திராஜா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்று செவ்வாக்கிழமை இரவு சுமார் 8.30க்கும் 9.00 மணிக்கம் இடைப்பட்ட நேரப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என தெரிவிக்கின்றனர்.
புகையிரத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞனின் சடலத்தை புகையிரதம் மூலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூரப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.