வெனி­சூலா நாட்டின் முன்னாள் அழ­கு­ராணி மொனிக்கா ஸ்பிய­ரையும் அவரின் துணை­வ­ரையும் சுட்­டுக்­கொன்ற நப­ருக்கு அந்­நாட்டு நீதி­மன்றம் 25 வரு­ட­கால சிறைத்­தண்­டனை விதித்­துள்­ளது.

10301012004 ஆம் ஆண்டு வெனி­சூ­லாவின் மிஸ் வெனி­சூலா அழ­கு­ராணி போட்­டியில் முத­லிடம் பெற்ற மொனிக்கா ஸ்பியரும் அவரின் துணை­வ­ரான பிரிட்­டனைச் சேர்ந்த தோமஸ் பெரியும் கடந்த வருடம் ஜன­வரி 6 ஆம் திகதி காரில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த போது அக்கார் பழு­த­டைந்த நிலையில் திருடர்கள் குழு­வொன்­றினால் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டி­ருந்­தனர்.

1030149இச்­சம்­பவம் வெனி­சூலா முழு­வதும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது. குற்­ற­வா­ளி­க­ளுக்கு கடும் தண்டனை வழங்­கு­மாறு வலி­யு­றுத்தி ஆர்ப்­பாட்­டங்­களும் இடம்­பெற்­றி­ருந்­தன.

இக்­கொ­லைகள் தொடர்­பாக, கைது செய்­யப்­பட்­டி­ருந்த ஜொரார்ட்டோ ஜோஸ் கொன்­ட்ரராஸ் அல்வெராஸ் எனும் இளை­ஞ­ருக்கு வெனி­சூலா நீதி­மன்­ற­மொன்று நேற்­று­முன்­தினம் 25 வருட சிறைத்தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

1030150மொனிக்கா ஸ்பியர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­போது 29 வய­தா­ன­வ­ராக இருந்தார்.

பிரிட்­டனைச் சேர்ந்த தோமஸ் பெரியை (39) அவர் திரு­மணம் செய்­தி­ருந்தார்.

இத்­தம்­பதி விவா­க­ரத்து செய்­தி­ருந்­த­போ­திலும் தொடர்ந்தும் நண்­பர்­க­ளாக இருந்­த­துடன் தமது 5 வயது மகளின் பரா­ம­ரிப்­பிலும் இரு­வரும் அக்­கறை செலுத்­தினர்.

அமெ­ரிக்­காவில் வசித்து வந்த மொனிக்கா ஸ்பியர்ஸ் விடு­மு­றைக்­காக வெனி­சூ­லா­வுக்குச் சென்றிருந்தார்.

அப்­போது தனது மகள் மற்றும் முன்னாள் கண­வ­ருடன் வெளி­சூ­லாவின் கர­போபோ நகரில் இரவு நேரத்தில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்­த­போது அவர்­களின் கார் பழு­த­டைந்­தது.

அதை­ய­டுத்து அவர்கள் உத­விக்­காக காத்­தி­ருந்­தனர்.

1030145ஆனால், ஆயுதக் குழு­வொன்று அவர்­களின் வாக­னத்­தையும் ஏனைய பொருட்­க­ளையும் கொள்­ளை­யிட முயன்­றது.

இதைத் தடுப்­ப­தற்­காக தோமஸ் பெரியும் மொனிக்­காவும் காருக்குள் புகுந்து கத­வு­களை பூட்டிக்­கொண்டி­ருந்­த­போது அவர்கள் மீது கொள்­ளையர் குழு துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தது.

Share.
Leave A Reply