சில தினங்களுக்கு முன்னர் மிருகத்தனமான முறையில் கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட வித்தியாவின் கொலை ஒரு பழிவாங்கல் என பொலிஸ் விசாரணைகள் மூலம் உறுதியாகியுள்ளது.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஒருவருக்கே வித்தியாவைக் கொலை செய்து பழி தீர்க்கத் தேவைப்பட்டிருந்தது.

குறித்த நபர் செய்த களவு ஒன்றினை வித்தியாவின் தாயார் நேரில் கண்டுள்ளார். இதன் காரணமாக வித்தியாவின் தாயார் குறித்த நபருக்கெதிராக நீதிமன்றத்தில் சாட்சியளித்துள்ளார்.

அது சம்பந்தப்பட்ட வழக்கு இன்று வரை நடை பெறுகின்றதோடு வித்தியாவின் தாயாரின் சாட்சியம் காரணமாக களவில் ஈடுபட்ட நபருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியுள்ளன.

இதனாலேயே வித்தியாவின் தாயை இந்த முறையில் அவர் பழி தீர்த்துள்ளார்.

3a7d6adffa806fb25db311fdc360b52a குறித்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகள் அளித்த வாக்கு மூலம் பின்வருமாறு.

எமக்கு எதிராக சாட்சி சொல்வதை நிறுத்துமாறு நாம் அந்தப் பெண்ணுக்குப் பல தடவைகள் சொன்னோம். என்றாலும் அவள் அது பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

அவளின் சாட்சியம் காரணமாக வழக்கு எங்களுக்குப் பாதகமான முறையில் சென்று கொண்டிருந்தது. இதனால் அவளை (வித்தியாவின் தாயை) பழிவாங்க வேண்டும் என்ற வைராக்கியம் இருந்தது.

எவ்வாறு பழி வாங்குவது என யோசித்துக் கொண்டிருந்த போது எம்முடன் இருந்த ஒருவர் வித்தியாவை கடத்திச் சென்று கற்பழிக்கலாம் என ஆலோசனை வழங்கினான்.

ஆகவே வித்தியாவைக் கற்பழிக்கு செயலை செய்யும் பொறுப்பை 3 இளைஞர்களுக்குக் கொடுத்தோம்.

அவர்கள் கொழும்பில் தொழில் செய்பவர்கள். அதற்காக அவர்கள் 10000 ரூபா கேட்டனர். நாம் பணத்தைக் கொடுத்தோம்.

சம்பவ தினம் காலை நாம் அனைவரும் அதிகமாக மது அருந்தினோம். பின்னர் வித்தியா பாடசாலை நோக்கிச் செல்லும் பாதையில் அவள் வரும் வரை காத்திருந்தோம். வழமையாக அவள் 7.10 மணிக்கு அவ்விடத்தால் செல்வாள்.

சம்பவ தினம் அவளது நண்பர்களோ நண்பிகளோ அவளை சந்திக்கவில்லை. அது எமக்கு வாய்ப்பாக அமைந்தது.

பின்னர் அங்கு வந்த வித்தியாவைக் கடத்திக் கொண்டு காட்டுக்குள் இருக்கும் பாலடைந்த வீடொன்றுக்கு சென்றோம். நாம் அதிகமாகக் குடித்திருந்ததால் வைராக்கியம் மட்டுமே எம்முள் நிறைந்திருந்தது.

பின்னர் வித்தியா பயத்தினால் கத்தத் தொடங்கினாள். இதனால் எமக்குப் பயம் ஏற்பட்டது. அத்துடன் அவள் எம்மைக் கடிக்க முற்பட்டாள். எம்மை அடித்துத் தப்பிக்க முற்பட்டாள்.

இதனால் நாம் அவளது தலை முடியைக் கட்டியிருந்த ரிபனை எடுத்து கைகளைக் கட்டினோம். பின்னர் வெள்ளைச் சீருடையின் பெல்ட்டை எடுத்து அவளது காளைக் கட்டினோம்.

பின்னர் அவள் கத்தாமல் இருக்க அவளது உள்ளாடையைக் கழற்றி அவளின் வாயில் போட்டோம். பின்னர் நாம் ஒருவர் பின் ஒருவராக அவளை கற்பழித்தோம். இதனால் வலியால் துடித்த அவள் அடிக்கடி நினைவிழந்து போனாள்.

காலை 7.45 முதல் 11 மணி வரை நாம் அவ்விடத்தில் இருந்தோம். காட்டுப் பகுதி என்பதால் யாரும் வரவில்லை. 11 மணியாகும் போது இச்செயல் எமக்கு அழுத்துப் போனது.

நாம் அங்கிருந்து வர ஆயத்தமாகிய போது வித்தியா மூச்சுத் திணறி இறந்திருந்தாள். நாம் அவளது உள்ளாடையை வாயில் திணித்ததால் அவளுக்கு மூச்சுத்திணறி மரணமாகியிருக்கலாம்.

அவளது உடலைக் கண்டெடுப்பார்கள் என நாம் நம்பினோம் ஆனால் இது இவ்வளவு தூரம் செல்லும் என நாம் எதிர்பார்க்கவில்லை.

கொழும்பில் இருந்து வந்தவர்களும் மரண வீட்டில் எல்லா வேலைகளையும் செய்தோம். ஏனையோர்களுடன் சேர்ந்து இச்செயலைச் செய்தவர்களுக்கு ஏசுவது போன்று நடித்தோம். இந்தக் கொலையுடன் சம்பந்தப்பட்ட 9 பேர் தற்பொழுது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவி வித்தியா உயிர் பிரிந்த இடம் இதுதான்

Share.
Leave A Reply