செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக டாப்சி, கேத்ரீன் தெரசா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
மேலும், ஜகபதி பாபு உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு முதலில் கானகம் என்று தலைப்பு வைத்திருந்தனர். தற்போது இப்படத்திற்கு ‘கான்’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கானகம் என்றாலும் கான் என்றாலும் காடு என்றே பொருள்படும். எனவே, கானகம் என்பதை கான் என்று சுருக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சிம்பு முருக பக்தராக நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே நிஜவாழ்க்கையிலும் ஆன்மீகத்துக்கு மாறிவிட நினைத்துக் கொண்டிருக்கும் சிம்பு, இந்த படத்தில் முழு ஆன்மீகவாதியாகவே நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், டாப்சி போலீஸ் அதிகாரியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக்ஷன் திரில்லர் பாணியில் இப்படம் தயாராகி உள்ளது.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தில் நடிக்க தொடங்கியிருக்கிறார் சிம்பு.
கல்லூரியில் சேரும் லட்சுமிமேனன்
28-05-2015
தமிழில் கும்கி, படத்தில் நடித்து லட்சுமி மேனன் பிரபலமானார். விஷால், சசிகுமார், கார்த்தி, விமல் படங்களில் தொடர்ந்து நடித்தார். அந்த படங்கள் அவரை மேலும் பிரபலமாக்கியது. அத்துடன் பள்ளியில் பிளஸ் – 2வும் படித்து வந்தார்.
படப்பிடிப்புக்கு சில நாட்கள் ஓய்வு விட்டு பரீட்சைக்கு படித்து தேர்வும் எழுதினார். சமீபத்தில் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் லட்சுமி மேனன் பாஸ் ஆகி விட்டார். இதோடு படிப்பை நிறுத்தி விட்டு முழு நேரம் சினிமாவில் நடிப்பார் என பேசப்பட்டது.
ஆனால் லட்சுமி மேனனுக்கு படிப்பை விட விருப்பம் இல்லை. கல்லூரியில் சேர்ந்து படிக்க திட்டமிட்டுள்ளார். கொச்சியில் உள்ள பிரபல கல்லூரியொன்றில் சேர முடிவு செய்துள்ளார். அந்த கல்லூரி நிர்வாகமும் லட்சுமி மேனனுக்கு சீட் கொடுக்க முன் வந்துள்ளது.
படித்துக் கொண்டே தொடர்ந்து நடிக்கலாம் என்றும் படப்படிப்புகள் இருக்கும் போது விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அக்கல்லூரி நிர்வாகம் லட்சுமிமேனனுக்கு சுதந்திரம் வழங்கியுள்ளது.
ஆங்கில இலக்கியம் அல்லது பேஷன் டெக்னாலஜியை பாடமாக எடுத்து படிப்பார் என கூறப்படுகிறது. பேஷன் டெக்னாலஜி சினிமாவுக்கு உதவியாக இருக்கும் என கருதுகிறார்.
ஆங்கில இலக்கியம் எடுத்தால் சரளமாக எல்லோரிடம் பேசி பழகலாம் என்ற எண்ணமும் இருக்கிறது. எனவே இரண்டில் எதை தேர்வு செய்வது என்று தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.