வெல்லவாய பிரதேசத்தில் பெண்கள் இருவர் பொது இடமொன்றில் மோதிக்கொண்டுள்ளனர். நபரொருவரின் மனைவியும் அவர் கள்ளத்தொடர்பை பேணி வந்த பெண்ணொருவருமே இவ்வாறு மோதிக்கொண்டுள்ளனர்.
இம்மோதலின் போது அந்நபரும் அங்கிருந்ததுடன் அவர் மீதும் இதன்போது வேறு சிலரால் தாக்குதல் நட த்தப்பட்டுள்ளது.
இறுதியில் அந்நபர் மற்றும் பெண்கள் இருவரும் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ரத்கம மாணவன் சடலமாக கண்டுபிடிப்பு
29-05-2014
ரத்கம பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜின் கங்கை கரையோரம் மேற்படி சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவன் கடந்த 25 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்ததுடன் அவரது பாடசாலை பை மற்றும் செருப்பு ஜின் கங்கை அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.