வடமாகாணத்தில்  கடந்த 14 நாட்களில் மாத்திரம்  10 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர்களை இன்று சந்தித்து கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார்.

பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல் துஷ்பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ள போதிலும், இதில் பாடசாலைகளில் கற்பித்துக் கொடுக்கும் ஒருசில ஆசிரியர்களினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை கவலையை அளிப்பதாக அமைச்சர் கூறினார்.

இதற்கமைய கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்றுள்ள இச்சம்பவங்களில் 10 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வன்முறையில் ஈடுபட்ட மேலும் நால்வர் கைது
30-05-2014

article_1432978584-ddcயாழ்ப்பாணம் நகரப்பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட சந்தேகத்தில் மேலும் நால்வரை சனிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக யாழ்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நால்வரும் ஓட்டுமடப்பகுதியினை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறினர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

இதன்போது வர்த்தக நிலைய உரிமையாளர்களை அச்சுறுத்தியமை, வங்கிகளுக்குள் புகுந்து அதன் செயற்பாடுகளுக்கு பங்கம் விளைவித்தமை, தனியார் கட்டடங்கள் மீது கல்வீசி தாக்கியமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களையே இவ்வாறு கைது செய்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைதான நால்வரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக வர்த்தக நிலைய உரிமையாளர்கள், மற்றும் வங்கிகளில் பதிவான சீ.சீ.ரீ.கமராவின் உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடக்கில் மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரிப்பு’- ல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன்  BBC  தமிழ் சேவைக்கு அளித்த பேட்டி …

Share.
Leave A Reply