உல்லாசப் பயணிகளின் காருக்குள் இருந்து கைப்பை ஒன்றிலிருந்த பொருட்களை யானையொன்று எடுத்து உட்கொண்ட சம்பவம் இந்தியாவிலுள்ள வினவிலங்குப் பூங்காவொன்றில் இடம்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பாந்திபூர் தேசிய பூங்காவுக்கு சுற்றுலா சென்றவர்கள் யானைகளை படம்பிடிப்பதற்காக தமது வாகனத்தை நிறுத்தினர்.
இதன்போது, கடும் பசியுடன் இருந்த யானையொன்று, தம்பதியொன்றை துரத்திவிட்டு அவர்களின் காருக்குள் தனது தும்பிக்கையை நுழைத்து கைப்பை ஒன்றை எடுத்துக்கொண்டது.
பின்னர் அக்கைப்பையை தனது வாய்க்குள் திணித்துக்கொண்டது. பழங்கள், வங்கிஅட்டைகள், நகைகள் முதலான பொருட்கள் அக் கைப்பையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இப்பொருட்களை விழுங்கியதால் யானையின் உள்ளுறுப்புகளில் காயம் ஏற்படலாம் என அஞ்சும் வனவிலங்குப் பூங்காவின் அதிகாரிகள், அந்த யானையை கண்காணித்து வருகின்றனர்.