யாழ். வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்த கணவன், தனது கழுத்தையும் அறுத்துக்கொண்டு கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.
தாளையடி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த சிவபாலன் (வயது 40) அவரது மனைவியான எஸ்.சுபாஷினி ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கணவன் மனைவிக்கு இடையில் நேற்று இரவு 9.30 மணியளவில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து படுகொலை செய்துள்ளார்.
பின்னர் தனது கழுத்தையும் கத்தியால் அறுத்த வாறு கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்துள்ளார். என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.