யாழ்ப்­பாணம், ஊர்­கா­வற்­றுறை – புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா­வுக்கு இடம்­பெற்ற கொடுமை இலங்­கையின் முழு பெண்­க­ளுக்கும் இடம்­பெற்ற கொடூ­ரத்­துக்கு சம­மா­னது. இது ஒரு  மிலேச்­சத்­த­ன­மான செயல் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை.

இந்த சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களை   இன்று, நாளைக்குள் அவ­ச­ர­மாக நிறைவுறுத்த முடியாது.

இது ஒரு பரந்த விசா­ரணை வித்­தியா பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்யப்­பட்ட சம்­பவம் தொடர்பில் கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்­க­ளிடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் சிறையில் வைத்து விஷேட வாக்குமூலங்­களை பதிவு செய்­துள்­ள­னர்.

அதில் குறிப்­பி­டப்­பட்ட விட­யங்கள் குறித்து தற்­போது விசா­ர­ணைகள் இடம்பெறுகின்றன என்று புலனாய்வுப் பிரிவின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா நீதிமன்றில் தெரி­வித்தார்.

வித்­தியா படு­கொலை வழக்கு நேற்று ஊர்­கா­வற்­றுறை பிர­தான நீதிவான் லெனின் குமார் முன்னிலையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போதே மேல­திக விசா­ரணை அறிக்­கையை சமர்­பித்து அவர் இதனைத் தெரி­வித்தார்.

இந் நிலையில் சந்­தேக நபர்கள் 9 பேரையும் எதிர்­வரும் ஜூன் 15 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­விட்ட நீதி­மன்றம் பாதிக்­கப்­பட்ட தரப்­பினர் (வித்­தியா குடும்­பத்­தினர் ) சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வீ.தவ­ரா­சாவின் வாதத்­துக்கு அமைய 9 ஆவது சந்­தேக நப­ரான சுவிஸ் குமார் என அறி­யப்­படும் மகா­லிங்கம் சசி­குமார் தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்­றுக்கு புலனாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டது.

vit-01.06-011பலத்த பாது­காப்பு

மாணவி வித்­தியா பலாத்­காரம் செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் கைது செய்யப்­பட்ட ஒன்­பது சந்­தேக நபர்­களும் நேற்று முதன் முத­லாக ஒன்­றாக மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன் போது ஊர்­கா­வற்­றுறைப் பிர­தே­சத்தின் பாது­காப்பு என்றும் இல்லா அளவு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் கல­க­ம­டக்கும் பொலி­ஸாரும் அங்கு குவிக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் மன்­றுக்கு வெளியே நீர் பீய்ச்­சி­ய­டிக்கும் வாக­னமும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

viththi_court_016

ஊர்­கா­வற்­றுறைப் பொலி­ஸா­ருக்கு மேல­தி­க­மாக அதனை அண்­டிய பிர­தே­சங்­களில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் இருந்தும் பொலிஸார் வர­வ­ழக்­கப்­பட்டு பாது­காப்பு ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

viththi_court_013

விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் பவல் வாக­னத்தில் சுமார் 10 அதி­ர­டிப்­படை வீரர்கள் பாது­க­ாப்பு வழங்க மேல­தி­க­மாக 6 ஜீப் வண்­டி­களில் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் பாது­காப்பு வழங்க என்.சி.1845 என்ற இலக்­கத்தை உடைய யாழ்.சிறைச்­சா­லைக்கு சொந்­த­மான விஷேட பஸ் வண்டி ஊடாக சந்­தேக நபர்கள் காலை 7.00 மணி­ய­ளவில் ஊர்­கா­வற்­றுரை நீதி­மன்­றுக்கு கொண்­டு­வரப்பட்டனர்.

சந்­தேக நபர்கள் சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் இல்லை

வழக்­கா­னது விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்ட போது சந்­தேக நபர்கள் சார்பில் எந்­த­வொரு சட்டத்­த­ர­ணியும் மன்றில் ஆஜ­ரா­க­வில்லை.

viththi_court_010அத்­துடன் வித்­தி­யாவின் தாயாரும் அவ­ரது அண்­ணனும் மன்­றுக்கு சமூ­க­ம­ளித்­தி­ருந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட  தரப்­பினர் என்ற ரீதியில் அவர்கள் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வீ.தவ­ராசா தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான ரீ.ஜனகன்,எஸ்.விஜே­லக்ஷ்மி, கார்­திகா மற்றும் அம்­பிகா ஆகியோர் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

முறைப்­பாட்­டாளர் தரப்பில் இந்த சம்­பவம் குறித்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­து­வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா மன்றில் பிரசன்னமாகியிருந்தார்.

பிர­தி­வாதி கூட்டில் சந்­தேக நபர்கள்

இந் நிலையில் வழ­மை­யான  நீதி­மன்ற நடவ்­டிக்­கை­களின் பின்னர் முதல் விசா­ர­ணை­யாக இந்த வழக்கு நீதிவான் லெனின் குமா­ரினால் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

இதன் போது கைது செய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­க­ளா­ன ­பூ­பால சிங்கம் இந்­திர குமார், பூபா­ல­சிங்கம் ஜெய­குமார், பூபா­ல­சிங்கம் தவக்­குமார், சஷேந்­திரன், சந்­தி­ர­ஹாசன், கிரி­ஷாந்தன், குகநாதன்,கோகுலன் மற்றும் சசி­குமார் ஆகியோர் அதே ஒழுங்கின் பிர­காரம் பிர­தி­வாதி கூட்டில் ஏற்றப்­பட்டே இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றது.

மேல­திக விசா­ரணை அறிக்கை தாக்கல்

இதன் போது குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் மாணவி வித்­தியா படுகொலை தொடர்­பி­லான மேல­திக விசா­ரணை அறிக்கை நீதி­வா­னுக்கு சமர்­பிக்­கப்­பட்­டது.

அந்த அறிக்­கையைத் தாக்கல் செய்த குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா அதில் உள்ள விட­யங்­களை நீதி­வா­னிடம் தெரி­விக்­கையில்;

ஊர்­கா­வற்­றுரைப் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர்கள் வவு­னியா சிறையில் வைக்கப்­பட்­டி­ருந்த போது நாம் அவர்­க­ளிடம் விஷேட வாக்கு மூலங்­களைப் பதிவு செய்துகொண்டோம்.

அந்த வாக்கு மூலத்தில் உள்ள விடய்ங்­களில் அவர்கள் பல்­வேறு விட­யங்­களைக் குறிப்­பிட்­டுள்­ளனர். அவற்றின் உண்மைத் தன்மைத் தொடர்பில் நாம் தற்­போதும் அவ­தானம் செலுத்தி வரு­கின்றோம்.

அந்த வாக்கு மூலத்தில் சந்­தேக நபர் ஒருவர் தான் சம்­பவம் இடம்­பெறும் போது பிர­தே­சத்தில் இருக்கவில்லை என மறுக்­கின்றார்.

எனினும் நாம் அதனை உட­ன­டி­யாக உறுதி செய்ய முடி­யாது. அது தொடர்பில் விசா­ர­ணைகள் தொடர்கின்­றன.

வாக்கு மூலத்தை மட்டும் வைத்து தீர்­மா­னிக்க முடி­யாது. சாட்­சி­யங்­களின் படி வாக்கு மூலம் ஒத்துப் போக வேண்டும். எனவே தான் வாக்கு மூலத்தில் உள்ள விட­யங்கள் தொடர்பில் நாம் அவ­தானம் செலுத்­தி­யுள்ளோம்.

அதனால் சட்ட வைத்­திய அதி­காரி முன்­னி­லையில் சந்­தேக நபர்கள் ஒன்­பது பேரி­னதும் இரத்த மாதிகளைப் பெற்று அதனை டீ.என்.ஏ.பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்த வேண்டும்.

இதற்­காக யாழ்.சிறைச் சாலை அத்­தி­யட்­ச­ருக்கு சந்­தேக நபர்­களின் இரத்த மாதி­ரி­களைப் பெற்றுக்கொள்ள அனு­ம­திக்­கு­மாறு உத்­த­ரவு பிறப்­பிக்க வேண்டும்.

அத்­துடன் வெள்­ள­வத்தை பிர­தே­சத்தில் உள்ள எச்.என்.பி.தனியார் வங்­கியின் தன்­னி­யக்க பணப்பரிமாற்றம் தொடர்­பி­லான  இயந்­திரம் வைக்­கப்­பட்­டுள்ள இடத்தில் உள்ள சீ.சீ.ரீ.வி.கம­ராவின் மாற்­றங்கள்  செய்­யப்­ப­டாத  மூலப் பிரதி எமக்கு அவ­சி­ய­மாகும்.

இதற்­காக அந்த வங்­கியின் கிளை முகா­மை­யா­ள­ருக்கு மன்று உத்­த­ர­வொன்­றினைப் பிறப்­பிக்க வேண்டும். கடந்த மே 13 முதல் 14 ஆம் திகதி வரை­யி­லான சீ.சீ.ரீ.வி.பதி­வு­களே எமக்கு இவ்­வாறு வசிய­மாகும்.

குறித்த திக­தியில் சந்­தேக நபர் ஒருவர் தான் வெள்­ள­வத்­தையில் இருந்­த­தா­கவும் இந்த வங்­கியில் பணம் பெற்றதா­கவும் கூரு­கின்றார். அதனை உறுதி செய்ய எமக்கு அந்த சீ.சீ.ரீ.வி காட்­சிகள் அவசியமாகும்.

அத்­துடன் வித்­தி­யாவின் சடலம் மீது பிர­தேத பரி­சோ­தனை மேற்கொண்­ட சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் சட­லத்தில் சில பகு­தி­களை மேல­திக ஆய்­வுக்­காக எடுத்­துள்­ளனர்.

அதனை எம்­மிடம் அவர்கள் கைய­ளிக்க வெண்டும். அந்த பகு­தி­களை அரச பகுப்­பாய்­வா­ள­ருக்கு புலனாய்வுப் பிரி­வினர் ஊடாக சமர்­பித்து அறிக்கை  பெற வேண்டும். இதற்கும் உத்­த­ர­வொன்­றினை மன்று பிறப்­பிக்க வேண்டும்.

சிவ­லோக நாதன் வித்­தி­யா­வுக்கு இடம்­பெற்ற கொடுமை இலங்­கையின் முழு பெண்­க­ளுக்கும் இடம்­பெற்ற கொடூ­ரத்­துக்கு சம­மா­னது.

இது ஒரு மிலேச்­சத்­த­ன­மான செயல் என்­பதில் எவ்­வித சந்­தே­கமும் இல்லை. இந்த சம்­பவம் தொடர்பிலான விசா­ர­ணை­களை இன்று, நாளைக்குள் அவ­ச­ர­மாக நிறை­வு­றுத்த முடி­யாது. இது ஒரு பரந்த விசா­ரணை.

அவர்­க­ளது வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள ஒவ்­வொரு விடயம் குறித்தும் பரந்த விசா­ரணை அவ­சி­ய­மா­னது.

இந்த சமப்­வத்­துடன் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­க­ளுக்கு தண்­டனை பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டி­யது எனது பொறுப்­பாக கரு­து­கின்றேன்.

நான் மேலும் பல முக்­கி­ய­மான சம்­ப­வங்கள் குறித்து விசா­ரணை செய்­து­வரும் நிலையில் வித்தியாவின் விவ­காரம் குறித்து முழு அளவில் தற்­போது விசா­ர­ணையில் இறங்­கி­யுள்ளேன்.

சந்­தேக நபர்­களின் தொலை­பேசி இலங்­கங்கள் தொடர்­பிலும் அது தொடர்­பி­லான பல விட­யங்கள் குரித்தும் துறைசார் நிபு­ணர்கள் ஊடாக அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. அது தொடர்­பிலும் அடுத்த தவணை மன்றில் அறிக்கை சமர்­பிக்­கலாம் என எதிர்ப்­பார்க்­கின்றேன்.

கைதா­கி­யுள்ள சந்­தேக நபர்­க­ளுக்கு எச்­சந்­தர்ப்­பத்­திலும் பிணை வழங்கக் கூடாது. அத்­துடன் அவர்­களை சமூக மயப்­ப­டுத்தும் முயற்­சி­யிலும் ஈடு­படக் கூடாது. அந்த நடவ்­டிக்­கைகள் பாரிய எதிர்­வ­லை­களை உரு­வாக்கும்.பாரிய பிரச்­சி­னை­களைத் தோற்­று­விக்கும்.

இதன் போது­கு­றுக்­கிட்ட  நீதிவான் லெனின் குமார் பிணைக் குறித்து ஆர­ய­வில்லை என தெளி­வு­ப­டுத்­தி­ய­துடன் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் கோரிய இரத்­த­மா­திரி பெறல், சட்ட வைத்­திய அதி­கா­ரி­யிடம் உள்ள உடற் கூற்­றுக்­களை கைய­ளித்தல், வெள்­ள­வத்தை எச்.என்.பி. தனியார் வங்­கியின் தன்­னி­யக்க பணப் பறி­மாற்று நிலை­யத்தின் சீ.சீ.ரீ.வி. காட்­சி­களை கைய­ளித்தல், போன்ற விட­யங்கள் தொடர்பில் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பித்தார்.

viththi_court_007சட்­டத்­த­ரணி தவ­ராசா வாதம்

இதனைத் தொடர்ந்து பாதிக்­கப்­பட்டோர் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா தமது தரப்பு வாதங்­களை முன்­வைத்தார்.

இந்த புங்­குடு தீவி சம்­பவம் இன்று பல­ராலும் அவ­தா­னிக்­கப்­படும் ஒரு சம்­பவம். அதனால் இந்த விசாரணையை துரி­தப்­ப­டுத்தி விரை­வாக நிறைவு செய்­ய­வேண்டும்.

இந்த சம­ப­வத்தின் தொட­ரக ஏற்­பட்ட பல பிரச்­சி­னை­க­ளுக்கு 9 ஆவது சந்­தேக நபர் தொடர்­பி­லான விடயங்கள் முக்­கிய கார­ண­மாகும்.

அவர் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்ட நிலையில் கொழும்­புக்கு தப்பிச் சென்று மீண்டும் கைதா­னது எப்படி. அதன் பின்­னணி என்ன .இது தான் மக்கள் பதற்­றப்­பட கார­ண­மாகும்.

ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் இந்த மன்­றுக்கு தாக்கல் செய்த முத­லா­வது பீ அறிக்­கையில் இந்த சம்பவத்­துடன் ஒன்­பது சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்­ட­தாக உள்­ளது.

எனினும் பின்னர் வெள்­ள­வத்­தையில் வைத்து இந்த ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் கைதா­கி­யுள்ளார். அது எப்­படி முடியும்.

ஒன்­ப­தா­வது சந்­தே­க­ந­ப­ரான சுவீஸ் குமார் என்­ற­ழைக்­கப்­படும் மகா­லிங்கம் சசிக்­குமார் என்­பவர் ஏற்கனவே கைது­செய்­யப்­பட்டு பின்னர் எவ்­வாறு கொழும்­புக்கு தப்பிச் சென்றார்?

அவரை வெள்­ள­வத்தை பொலிசார் என்ன குற்­றத்­திற்­காக பின்னர் கைது செய்­தனர் போன்ற கேள்விகளுக்கு விடை­யில்லை.

இந்த சந்­தேக நப­ருக்கு எதி­ராக சாட்­சிகள் இல்­லா­ததால் அவரை கைதுச் எய்­ய­வில்லை என பொலிஸார் கூறு­கின்­றனர்.

அப்­ப­டி­யானால் இந்த 9 ஆவது சந்­தேக நபரை விடு­விக்க மறை­முக முயற்­சிகள் முன்னெடுக்கப்படுகின்­ற­னவா. இது தொடர்பில் விசா­ர­ணை­யொன்று அவ­சியம் என்றார்.

பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்­தவின் குறுக்­கீடு

இந்த விசா­ர­ணை­களை அவ­ச­ர­மாக முடிக்க வேண்டும் என்ற பாதிக்­கப்­பட்ட தரப்பின் கோரிக்கை நியாய­மா­னது.

எனினும் நடை முறை சிக்­கல்கள் அதில் உள்­ளன. எனினும் என்னால் இயன்­ற­ளவு சீக்­கிரம் இதனை நான் நிறைவு செய்வேன்.

அத்­துடன் ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் மக்கள் தன் மீது தாக்­குதல் நடத்­துவர் என்ற பயத்­தி­லேயே கொழும்­புக்கு சென்­ற­தாக எம்­மிடம் வாக்கு மூல­ம­ளித்­துள்ளார். எனினும் அந்த விடயம் குறித்து நாம் இன்னும் உறுதி செய்­ய­வில்லை.

எமது விசா­ர­ணை­களில் அவர் கைது செய்­யப்­பட்­டதன் பின்னர் அல்­லது பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்­பட்ட பின்னர் தப்­பிக்க வைக்­கப்­பட்­டி­ருந்தால் அதற்கு பொறுப்புக் கூற வேண்­டிய அனைத்து நபர்­க­ளுக்கும் எதி­ராக சட்டம் நிலை நாட்­டப்­படும்.

அவ்­வாறு உத­வி­ய­வர்கள் இருப்பின் அவர்கள் கைது செய்­யப்­பட்டு மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­டுவர் என்பதை உறு­தி­யாக தெரி­விக்­கின்றேன்.

விசா­ர­ணைக்கு நீதிவான் உத்­த­ரவு

இந்த வாத­தி­னை­ய­டுத்து முன்­னுக்கு பின் முர­ணான பீ அறிக்கை தக­வல்கள் குறித்தும் ஒன்­ப­தா­வது சந்­தேக நபர் கொழும்­புக்கு சென்ற பின்­னணி குறித்தும் தனி­யான விசா­ரணை ஒன்றை நடத்­து­மாறும், அதில் எவ­ரேனும் திட்­ட­மிட்டு சந்­தேக நபரை தப்­பிக்க உதவி இருப்பின் அது தொடர்பில் அவர்­க­ளுக்கு எதி­ராக நடவ்­டிக்கை எடுக்­கு­மாறும் நீதிவான் லெனின் குமார் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு உத்தரவு பிறப்­பித்தார்.

இந்­நி­லையில் மன்றில் பார்­வை­யாளர் பகு­தியில் அமர்ந்­தி­ருந்த வித்­தி­யாவின் தாயார் கண்ணீர் மல்க வழக்கை அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்தார்.

ஒரு கட்­டத்தில் சோகத்தின் உச்­சத்தை அடைந்த அவர் அரு­கி­லி­ருந்த பெண்­ணொ­ரு­வரின் தோழில் சாய்ந்­த­வண்ணம் கண்ணீர் விட்­ட­ழுதார்.

பொலிஸ் சார்ஜன்ட் சாட்­சியம்

இத­னை­ய­டுத்து யாழ் தட­ய­வியல் பொலிஸ் பிரிவின் சார்­ஜ­ன் றொசான் சில தட­யங்­களை மன்றில் முன்­வைத்து சாட்­சி­ய­ம­ளித்தார்.

2015.05.14 அன்று ஊர்­கா­வற்­றுறை தலைமை பொலிஸ் நிலை­யத்தில் இருந்து தொலை­பேசி அழைப்புவந்­தது.

10ம் வட்­டாரம் ஆல­யடி சந்தி புங்­கு­டு­தீவு என்ற முக­வ­ரியில் பெண் ஒருவர் கொலை செய்­யப்­பட்டுள்ளதா­கவும் அது தொடர்பில் பரி­சோ­த­னை­களைச் செய்­யு­மாறும் எமக்கு தகவல் அளிக்­கப்­பட்­டது.

சுமார் 8.30 மணி­ய­ள­வி­லேயே எமக்கு அந்தத் தகவல் கிடைத்­தது நானும் எனது மேலும் இரு உத்தியோகத்­தர்­களும் 61-7526 என்ற ஜீப் வண்­டியில் ஸ்தலத்­திற்குச் சென்றோம்.

அங்கு சென்ற நான் 9.30 முதல் 11.55 வரை சடலம் இருந்த இடத்­தினில் பரி­சோ­தனை செய்தேன் நான் அங்கு செல்­லும்­போது மழை­யுடன் கூடிய கால­நிலை அங்கு காணப்­பட்­டது. குற்றம் இடம்­பெற்ற இடத்தில் ஊர்­கா­வற்­றுறை தலைமைப் பொலிஸ் பரி­சோ­த­கரும் இருந்தார்.

18 வய­து­டைய வித்­தியா என்னும் பாட­சலை மாண­வியே வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக சந்­தே­கிப்­ப­தாக அவரே அப்­போது அவ்­வி­டத்தில் வைத்து என்­னிடம் கூறினார்.

சட­ல­மா­னது நான் செல்­லும்­போது கறுப்­பு­நிலை பொலித்தீன் பையினால் மூடப்­பட்­டி­ருந்­தது. அங்கு யாழ் சட்ட வைத்­திய அதி­கா­ரியும் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்தார்.

நானும் என்­னுடன் வந்த உத்­தி­யோ­கத்­தர்­களும் சம்­பவ இடத்தை முற்­றாகப் பரி­சோ­தித்தோம். சம்­பவம் இடம்­பெற்ற இட­மா­னது புங்­கு­டு­தீவு ஆலை­யடி சந்­தி­யி­லி­ருந்து 400 மீற்றர் தூரத்தில் குமா­ர­சாமிப் பிள்ளையார் கோவி­லுக்கு திரும்பும் சந்­தியில் இடது புறத்தில் காடு­களால் சூழப்­பட்ட இடம் காணப்பட்டது.

Vithiya-03பாதையின் இரு புறத்­திலும் 150 மீற்றர் வரை பற்­றைக்­கா­டுகள் அடர்ந்து பாழ­டைந்­தி­ருந்­தன. பாதையிலி­ருந்து 7 மீற்றர் தூரத்­தி­லியே குற்­றப்­பி­ர­தேசம் இருந்­தது.

எனினும் பாதையில் இருந்து பார்த்தால் காடுகள் வளர்ந்­தி­ருந்­த­மையால் அந்த இடம் தெரி­யாது. நான் ஒற்­றை­யடிப் பாதை ஊடாக குற்றம் இடம்­பெற்ற இடத்­திற்குச் சென்றேன் அந்த இடத்தில் பனைமரங்கள் காணப்­பட்­டன. அல­ரி­ம­ரங்­களும் இருந்­தன.

viber-image-300x225அந்த இடம் இருள் சூழ்ந்­தி­ருந்­தது. அந்தப் பின்­ன­ணி­யி­லேயே சடலம் நிர்­வா­ண­மாக காணப்­பட்­டது. (இதன்­போது குறுக்­கிட்ட நீதிவான் சடலம் காணப்­பட்ட விதத்தை குறிப்­பி­டு­வதைத் தவிர்த்து தட­யத்தை சேக­ரித்­ததை மட்டும் கூறு­மாறு தெரி­வித்தார்)

கையுறை ஒன்­றுடன் நான் சட்ட வைத்­திய அதி­கா­ரி­யுடன் இணைந்து சட­லத்தை பரி­சோ­தனை செய்ய ஆரம்­பித்தேன் அதன்­போது அந்தப் பெண்ணின் இடது புற மார்பில் பெண் ஒரு­வரின் அல்­லாத உரோமங்கள் இரண்டு இருந்­தன அவ் இரண்டு உரோ­மங்­க­ளையும் வெவ்­வே­றாக இட்டு 135/2015 என பதிவு செய்து சாட்­சி­ய­மாக மன்­றிடம் சமர்ப்­பிக்­கிறேன்.

இவற்றை அரச இர­சா­யனப் பகுப்­பாய்­வுக்கு அனுப்பி டிஎன்ஏ பரி­சோ­த­னை­யுடன் ஒப்­பிட்டுப் பார்க்­க­வேண்டும். என்றார்.

vinthan_vidyahome_003பொலிஸ் கான்ஸ்­ரபிள் துசார சாட்­சியம்

இத­னை­ய­டுத்து யாழ் தட­ய­வியல் பிரிவின் பொலிஸ் கான்ஸ்­ட­பி­ளான 28 வய­து­டைய துசார என்­பவர் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இந்தக் குற்றம் தொடர்பில் சந்­தே­க­ந­பர்கள் வாக்­கு­மூலம் அளித்­துள்­ள­தன்­படி குற்றம் இடம்­பெற்ற இடத்தை சோதனை செய்யும் பணி ஊர்­கா­வற்­றுறை தலைமைப் பொலிஸ் நிலையம் ஊடாக எமக்கு வழங்­கப்­பட்­டது.

அதன்­படி தலைமைப் பொலிஸ் பரி­சோ­தகர் வீர­சூ­ரி­யவின் ஆலோ­ச­னை­யின்­படி குலேந்­திரன் ஜனனி றொசான் ஆகிய எனது சக உத்­தி­யோ­கத்­தர்­க­ளுடன் 61-7526 என்ற ஜீப் வண்­டியில் குற்றம் இடம்­பெற்ற இடத்­திற்குச் சென்றோம். றொசானே வண்­டியைச் செலுத்­தினார்.

vinthan_vidyahome_002அங்கு சென்­ற­போது சந்­தே­க­ந­பர்கள் வழங்­கிய வாக்­கு­மூ­லத்­திற்கு அமைய வரை­யப்­பட்ட வரை­படம் ஒன்று அப்­போது விசா­ர­ணை­களை செய்­து­வந்த உப பொலிஸ் பரி­சோ­தகர் ஹிரா­னினால் எமக்கு வழங்­கப்­பட்­டது அந்தப் படத்­திற்கு அமை­வாக நாம் சோத­னை­களை ஆரம்­பித்தோம்.

நாம் அவ்­வாறு பரி­சோ­த­னை­களை ஆரம்­பிக்­கும்­போது குற்றம் இடம்­பெற்று 5 நாட்கள் கடந்­தி­ருந்­தன.

நாம் பரி­சோ­த­னை­களை ஆரம்­பிக்­கும்­போது சீரற்ற கால­நி­லையே காணப்­பட்­டது. குற்றம் இடம்­பெற்ற இடத்தில் ஒரு பாழ­டைந்த கட்­ட­டமும் இருந்­தது அந்தக் கட்­ட­டத்­திற்கு கூரை இருக்­க­வில்லை.

அந்த இடத்­திலும் நாம் பரி­சோ­த­னை­களை நடத்­தினோம் செங்­கல்லால் கட்­டப்­பட்­டி­ருந்த அந்தப் பாழ­டைந்த கட்­டி­டத்தில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் பூவ­ரசம் மரங்கள் இரண்டு இருந்­தன.

அந்தப் பகு­தி­யிலும் நாம் சோதனை செய்தோம். எங்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்ற வரை­ப­டத்­தின்­ப­டியே இந்த சோத­னைகள் இடம்­பெற்­றன.

பாழ­டைந்த வீட்டின் அத்­தி­பாரப் பகு­தியில் உரோ­மங்கள் சிலதை நாம் அவ­தா­னித்தோம் அதனை இலக்கம் 1 என நான் அடை­யா­ளப்­ப­டுத்­தினேன் இலக்கம் 1 இலி­ருந்து இடப்­பக்­க­மாக மேலும பல ரோமங்கள் இருந்­தன அதனை இலக்கம் 2 என அடை­யா­ள­மிட்டேன்.

தொடர்ந்து சோனை செய்­யபின் இலக்கம் 2க்கு இடப்­பு­றத்தில் மேலும் உரோ­மங்­களை நான் அவதானித்தேன் அதனை இலக்கம் 3 என அடை­யா­ள­மிட்டோம்.

இலக்கம் 3 இலி­ருந்து இடது புற­த­தி­லி­ருந்த செங்­கற்­ற­காளல் எழுப்­பப்­பட்­டி­ருந்த சுவரில் சிலந்தி வலைகள் இருக்க அத­ன­ருகே மேலும் ஒரு உரோமம் இருந்­தது.

அதனை இலக்கம் 4 என அடை­யா­ள­மிட்டோம். அந்த தட­யங்­களை வெவ்­வே­றாக அடை­யா­ளப்­ப­டுத்தி இன்று உங்கள் முன் சமர்ப்­பிக்­கிறேன்.

இந்தத் தடை­யங்­களை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தி சந்தேகநபர்களினுடைய இரத்த மாதிரிகளுடன் ஒப்பிட்டு விசாரணை செய்ய முடியும் என யோசனை செய்கிறேன் என்றார்.

இதனையடுத்து வித்தியா கொலை தொடர்பிலான விசாரணைகளின் தற்போதைய நிலை குறித்து நீதிவான் குற்றப் புலனாய்வு பிரிவினரை வினவினார்.

சந்தேக நபர்களின் தொலைபேசி இலக்கங்கள் தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களது வாக்குமூலங்களில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பிலும் அவற்றின் உண்மைத் தன்மை தொடர்பிலும் தற்போது விசாரிப்பதாக புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் நிசந்த டி சில்வா நீதிவானிடம் தெரிவித்தார்.

இந்தப் பதிலையடுத்து சந்தேக நபர்கள் ஏதேனும் கூறவிரும்புகின்றனரா என நீதிவான் கேட்டபொழுது,

அவர்களில் ஒருவர் தனக்கும் இந்த மிலேச்சத்தனமான செயலுக்குமிடையே எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும் சம்பவ தினம் தான் கொழும்பில் இருந்தாகவும் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், அது தொடர்பில் தற்போது புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் நடத்தி வரும் நிலையில் அவ்வாறு கொழும்பில் இருந்ததற்கான சாட்சியங்கள் இருப்பின் அதனை இவ்வழக்கு மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படும்போது அங்கு முன்வைக்க முடியும் எனவும் சந்தேக நபர்கள் அடுத்து வரும் தவணைகளில் சட்டத்தரணிகளை வைத்து தமது தரப்பு நியாயங்களை முன்வைக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து ஒன்பது சந்தேகநபர்களையும் எதிர்வரும் யூன் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான் லெனின் குமார் அன்றைய தினம் வித்தியாவின் மரண விசாரணைகள் இடம்பெறும் எனவும் அதில் அவரது தாயாரும் சகோதரரும் சாட்சியமளிக்க சமூகமளிக்கும்படியும் குறிப்பிட்டார்.

வழக்கு நிறைவுற்றதன் பின்னர் சந்தேக நபர்கள் மன்றில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் யாழ் சிறைச்சாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

Share.
Leave A Reply