உலக கால்பந்தில் நம்பர் ஒன் வீரரான ரொனால்டோ பொது இடத்தில் சிறுநீர் கழித்த குற்றச்சாட்டுக்குள்ளாகியிருக்கிறார். அவரை பிடித்த போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
ரியல்மாட்ரிட் அணி வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது பிரான்சில் விடுமுறை நாட்களை கழித்து வருகிறார். அங்குள்ள செயின்ட். ட்ரோபஸ் நகரில் தங்கியுள்ள அவர், திங்கட்கிழமையன்று இரவு விடுதி ஒன்றில் விருந்தில் கலந்து கொண்டுள்ளார்.
பின்னர் காலையில் அந்த விடுதியை விட்டு வெளியே வந்த ரொனால்டோவுக்கு அவசரமாக ‘உச்சா’ வந்துள்ளது.
இதையடுத்து தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் மறைவில் நின்று ரொனால்டோ சிறுநீர் கழித்துள்ளார். இது அங்கிருந்த ரகசிய கேமராவில் பதிவானது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ரொனால்டோவை பிடித்துள்ளனர்.
பின்னர் அவரை எச்சரித்து விடுவித்துள்ளனர். ரொனால்டோ காருக்கு மறைவாக நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது போன்ற புகைப்படம் இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.