வடக்கு, கிழக்கு தவிர்ந்த இலங்கையில் வாழும் சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களுக்க சேவையாற்றுவதற்காக தழிழ் முற்போக்கு கூட்டணி என்ற புதிய கூட்டமைப்பு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணே­சன்­ தலைமையில் இன்று உதயமானது.

manokanesan-1 இந்த கூட்டணியின் பிரதித் தலைவர்களாக ராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கூட்டணியின் பொதுச் செயலாளராக மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் லோரன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

manokanesanகொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மனோ தலைவர் மனோ கணேசன், பிரத்தித் தலைவர்களான வே. இராதாகிருஷ்ணன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோரினால் ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய தழிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், இந்த கூட்டணியை அமைப்பதற்கு நாங்கன் நீண்ட காலமாக கலந்துறையாடினோம்.

வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் வாழும் சுமார் 15 இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இந்த தழிழ் முற்போக்கு கூட்டணியால் நன்மை பெறவுள்ளனர்.

ekamparamமலையக மக்களை பிரதானமாக கொண்டு வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய ஆறு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களை அரவணைக்கும் வகையில் தழிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மக்களின் பிரச்சினைக்கு தேசிய அளவில் மாத்திரமின்றி சர்வதேக ரீதியிலும் நாம் தீர்வு காணுவோம்.

எமது இந்த புதிய கூட்டணியில் ஆலோசனை சபை உள்ளது. நாம் என்ன தீர்மானம் எடுத்தலும் இந்த சபையுடன் கலந்துறையாடி நியாயமான தீர்வுகளை மக்களுக்கு பெற்று கொடுப்போம்.

மதவாதம், இனவாதம், யுத்தம் போன்றவற்றிற்கு இந்த கூட்டணியில் ஒரு போதும் இடமில்லை.

கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி இதற்கான தீர்வை நாட்டு மக்கள் பெற்றுக் கொடுத்தனர். எமது சேவையை நாங்களை அனைவரும் ஒன்றாக இணைந்து தொடர்ந்து வழங்குவோம்.

manokanesan-3ekamparam tamil munaniராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன்

எமது இந்த புதிய கூட்டணியால் தோட்டத் தொழிலாளர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், தனியார் துறையில் கடமையாற்றுபவர்கள் என பலர் நன்மையை பெறுவர்.

இந்த மக்களுக்காக சேவையாற்றும் பொறுப்பு எமக்குள்ளது. நாங்கள் தனி தனியாக செயற்படாமல் கூட்டாக இணைந்து செயற்பட்டால் பல சேவைகளை செய்யமுடியும் என்பதனாலேயே நாம் ஒன்றிணைந்து புதிய கூட்டணியை ஆரம்பித்தோம்.

பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான பழனி திகாம்பரம்
இந்த தமிழ் முற்போக்கு கூட்டணியால் தோட்ட மக்களின் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்.

நாம் நீண்ட காலமாக யோசனை செய்து கலந்துறையாடியே இந் கட்சியினை ஆரம்பித்துள்ளோம். இதன் மூலம் தோட்ட மக்களின் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கவுள்ளளோம். எம்மை யாரும் பிரிக்க முடியாது.

Share.
Leave A Reply