மாத்தளை – எல்கடுவ வீதியில் செம்பூவத்த பிரதேசத்தில் இன்று மாலை வேன் ஒன்று 150 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 8 பேர் இதில் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றுலா சென்றுவிட்டு வீடு திரும்பும் வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share.
Leave A Reply