யாழ்ப்பாணம், சாவகச்சேரி, மகளிர் கல்லூரிக்கு அருகாமையில் ஆண் ஒருவரின் சடலம் காயங்களுடன் மீட்க்கப்பட்டுள்ளது.

இந்தச் சடலத்தை இன்று (08) காலையில் மீட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் நுணாவில் தெற்கு, சாவகச்சேரியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய சிவராசா சிவகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

stud-02கூலித் தொழிலாளியான இவர் நேற்றுக் காலை தொழிலுக்காகப் புறப்பட்டவர் இன்று காலையில் இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

stud-03விபத்தின் மூலம் மரணம் நிகழ்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்டுள்ள சாவகச்சேரிப் பொலிஸார், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் மேற்கொண்டுவருகின்றனர்.

stud-04stud-01

Share.
Leave A Reply