இஸ்லாமிய அடிமைப்படுத்துதலின் இன்னொரு மனிதாபிமானமற்ற, கொடூரமான வழக்கம் எதுவென்றால் அது பரவலான முறையில் மிருகத்தனமாக காயடிக்கப்பட்ட (castration) ஆண் அடிமைகள்தான்.

வரலாற்றாசிரியர்களால் பெருமளவிற்கு உதாசீனப்படுத்தப்பட்ட இந்த வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களினால் கண்மூடித்தனமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இன்றளவும் இம்மாதிரியாக காயடிக்கும் வழக்கம் இஸ்லாமிய உலகில் மிகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையே.

ஆனால் இந்தக் காட்டுமிராண்டித் தனமான செயலைச் செய்ய இஸ்லாமிய ஆட்சியாளர்கள் யூதர்களையும் மற்ற காஃபிர்களையும் உபயோகப்படுத்திக் கொண்டார்கள். எந்தவொரு மனித உறுப்பையும் சிதைக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்னும் பாவனையுடன்.

இதில் வேடிக்கை என்னவென்றால் “அமைதி மார்க்கமான” இஸ்லாமின் பெயரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் கொலை செய்யப்படுவது முகமது நபியின் காலத்திலிருந்தே இருந்து வரும் ஒரு வழக்கம்.

சுவனத்திலிருந்து அல்லா அருளிய சட்டத்தின்படி, ஒரு குறிப்பிட்ட குற்றமிழைத்தவர்களின் (உதாரணமாக, திருட்டு) கைகளையோ அல்லது கால்களையோ தயக்கமின்றி வெட்டி வீழ்த்தும் “அமைதி மார்க்கத்” தினருக்கு, அவர்கள் பிடித்த அப்பாவி ஆண் அடிமைகளைக் காயடிக்கையில் மட்டும் அல்லாவின் “மனித உறுப்பைச் சிதைக்கக் கூடாது” என்னும் புனிதச் சட்டம் நினைவுக்கு வந்துவிடும்.

இருப்பினும் காயடிக்கப்பட்ட அலிகளை (eunuch) தங்களுக்குச் சேவகம் செய்ய வைத்துக் கொள்ள நம்பிக்கையாளர்களுக்கு அல்லா சகலவிதமான அனுமதிகளையும் வழங்கியிருக்கிறான் என்பதே முற்றிலும் உண்மை.

உடல் முழுக்க மறைத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும்படி இஸ்லாமியப் பெண்களுக்குக் கட்டளையிடும்  அல்லா, அவர்கள் யார், யாருக்குத் தங்களின் முகங்களைக் காட்டலாம் எனக் குரானில்  விவரிக்கையில்,
the_mughal_harem_idi629
”…..உடலுறவு இச்சையின்றி பெண் தேவையில்லாத ஆண் வேலைக்காரர்களுக்கும் (குரான் 24:31)….” அவள் தன் முகத்தைக் காட்டலாம் என அனுமதி வழங்குகிறான்.

“இறை தூதர்” முகமது நபியே இது போன்ற அலிகளைப் பரிசாகப் பெற்றதாக ஹடித்களில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயடிக்கப்பட்டவர்கள் பொதுவாக அழகான, இளவயதுடைய சிறுவர்களே. அது போன்ற சிறுவர்களுக்கு இஸ்லாமிய உலகின் ஆட்சியாளர்களுக்கும், அங்கிருந்த செல்வந்தர்களுக்கும் மத்தியில் பெரும் தேவை இருந்தது.

இதற்குக் காரணமாக மூன்று அடிப்படைக் காரணங்களைச் சொல்லலாம். முதலாவது, ஒவ்வொரு இஸ்லாமிய ஆட்சியாளுக்கும் பெரும் ஹராம் (அந்தப்புரம்) இருந்தது.

அதில் ஆயிரக்கணக்கான அடிமைப் பெண்களும், அவர்களின் மனைவியர்களும் இருந்தார்கள்.

இப்படி ஏராளமனான பெண்களை அவர்களுக்குக் கொடுத்த அல்லா, அவர்கள் அத்தனை பேர்களையும் உடல் ரீதியாகத் திருப்திப் படுத்தும் சக்தியை அளிக்க மறந்து போனான்.

எனவே, அந்தப்புரத்திலிருந்த பெண்கள் தங்களின் இச்சைகளை முழுவதும் தீர்த்துக் கொள்ளவியலாத நிலைமையில் இருந்தார்கள்.

அத்துடன், தங்களது உரிமையாளன் அல்லது கணவன் பிற பெண்களுடன் கொட்டமடிப்பதுவும் அந்தப் பெண்களுக்கு பெரும் எரிச்சலையே கொடுத்திருக்கும்.

அப்படிப்பட்ட பெண்கள் தங்களின் ஆண் அடிமைகளுடன் அல்லது பிற ஆண்களுடன் உடலுறவு கொண்டு தங்களின் இச்சைகளைத் தீர்க்கவே விழைவார்கள். இது இயற்கை.

இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம். மொராக்கோவின் சுல்தானாக இருந்த மவுலே இஸ்மாயிலுக்குச் சொந்தமான, இன்னும் காயடிக்கப்படாத பெலோ (Pelow) என்கிற ஆண் அடிமையொருவன் சுல்தானின் மனைவியொருத்தியின் வேண்டுகோளுக்கு இணங்க, ஆச்சரியப்படத்தக்க வகையில் அந்தப்புரக் காவலனாக நியமிக்கப்பட்டான்.

சுல்தானுக்கு மிகவும் பிரியமான அந்த மனைவி, அடிமையான பெலோ மீது மிகுந்த “கவனிப்பு” காட்டினாள்.

c20005-danseuse-au-voileஇதனைச் சுல்தான் கண்டுபிடித்துவிட்டால் தனக்கு விளையப்போகும் ஆபத்தினை உணர்ந்து கொண்ட பெலோ, “நான் மிகவும் சிரமப்பட்டு அந்தப்புரக் காவலை மேற்கொண்டிருக்க வேண்டியதாக இருந்தது” என அச்சத்துடன் குறிப்பு எழுதி வைத்துச் சென்றிருக்கிறான்.

எனவே, இம்மாதிரியான பெரும் ஹராமை வைத்துக் கொண்டிருக்கும் இஸ்லாமிய சுல்தான்களும், பிற செல்வந்தர்களும் அதனை கவனித்துக் கொள்ள காயடிக்கப்பட்ட அலிகளையே பெரிதும் விரும்பினார்கள்.

இஸ்லாமிய ஆராய்ச்சியாளரான ஜான் லாஃபின் (John Laffin), “பொதுவாக கறுப்பின அடிமைகளை பெருமளவில் காயடிக்கப்பட்டார்கள்.

முஸ்லிம்கள் கறுப்பினத்தவர்களுக்கு உடலுறவில் அளவில்லாத ஆசையும், சக்தியும் இருப்பதாகக் கருதியதால் வந்த வினை இது” என்கிறார்.

எனவே, இந்தியாவிலிருந்து, ஆப்பிரிக்கா வரையிலிருந்த முஸ்லிம் நாடுகளின் அந்தப்புரங்களில் அலிகளே பெருமளவு உபயோகப்படுத்தப்பட்டார்கள்.

இவ்வாறு அந்தப்புரத்தில் பணிக்கமர்த்தப்பட்ட அலிகள், அங்கு வருவோர் போவோரைக் கண்காணித்துக் கொண்டார்கள்.

நடத்தை தவறி நடக்கும் பெண்களை, குறிப்பாக பிற ஆண்களுடன் உடலுறவு கொண்ட அந்தப்புரப் பெண்களைக் குறித்தான செய்திகளை உடனுக்குடன் சுல்தானின் காதுக்குக் கொண்டு செல்லும் உளவாளிகளாகவும் அவர்கள் பணி புரிந்தார்கள். எனவே, ஒவ்வொரு ஹராமிலும் ஆயிரக்கணக்கான அலிகள் தேவையாக இருந்தது.

இரண்டாவதாக, காயடிக்கப்பட்ட ஒரு மனிதனுக்குக் குடும்பமோ அல்லது பிள்ளைகளோ பிறக்கும் வாய்ப்பே இல்லாத காரணத்தால், தங்களின் வயதான காலத்தில் அவர்களை சுல்தான் கைவிடாதிருக்கும் பொருட்டும் அந்த அலிகள் மிகக் கடுமையான, இரக்கமற்ற கண்காணிப்பினை அந்த அந்தப்புரத்தில் மீது வைத்திருந்தார்கள்.

உடல் இச்சையிலிருந்து முற்றிலும் விடுபட்ட அவர்கள் எந்த வேலையையும் செய்யத் தயாராக இருந்தமையும் இன்னொரு முக்கியமான காரணமே.

மூன்றாவது மிக முக்கிய காரணம், இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும், இஸ்லாமியச் செல்வந்தர்களுக்கும், உயரதிகாருகளுக்கும்  ஓரினச் சேர்க்கையில் இருந்த மிக அதிகமான நாட்டமே.

ghilmanஇஸ்லாமிய ஆட்சியாளர்கள் அவர்களைச் சுற்றிலும் காயடிக்கப்பட்ட அலிகள் அல்ல்து கில்மான் (Ghilman) என அழைக்கப்பட்ட அழகான இளம் சிறுவர்களை வைத்திருந்தார்கள்.

அழகான உடையணிந்து, உடலெங்கும் வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு, பெண்மையே உருவாக நடந்து கொண்ட அவர்கள் மீது முஸ்லிம் ஆட்சியாளர்கள் அளவற்ற காதலுடன் இருந்தார்கள்.

அல்லாவின் சுவனத்தில் எங்கும் நிறைந்திருக்கும் இவ்வாறான இளம் சிறுவர்களைப் பற்றி குரானின் வசனங்கள் மிக உயர்வாகக் கூறுகின்றன.

“(சுவனத்திற்குப் போகும் நம்பிக்கையாளனைச்) சுற்றிலும், அழகான, நன்கு பாதுகாக்கப்பட்ட முத்துக்களை போன்ற சிறுவர்கள் அவர்களுக்குப் பணிந்து பணிவிடை செய்வார்கள்….(குரான் 52:24)”

“அங்கே மரணமற்ற இளைஞர்கள் கழுத்து நீண்ட ஜாடிகளிலும், கோப்பைகளிலும் ஊற்று நீருடன் காத்து நிற்பார்கள்….(குரான் 56:17-18)”

மேலும்,

“செல்வ வளம் பொழியும் அல்லாவின் சுவனத்தில் ஏராளமான இளம் கன்னிகளும் (Houris), சிறுவர்களும் (Ghilman) நிறைந்திருப்பார்கள்.

Giraud-Marchand-Esclavesஹவ்ரிஸ் எனப்படும் ஒரு போதும் வயது கூடாத கன்னிப் பெண்கள் மிக நீண்ட கண்களுடனும், பருத்துத் துருத்திய முலைகளுடனும் இருப்பார்கள்.

இறப்பே இல்லாத, முத்துக்களை போன்ற அழகான இளம் சிறுவர்கள் தங்களின் உடலைச் சுற்றி பச்சை நிற ஆடையணிந்து, வெள்ளியிலான நகைகளை அணிந்து நிற்பார்கள்”

முகமது நபியின் காலத்திலிருந்தே இளம் சிறுவர்களின் மீதான இச்சை இஸ்லாமிய உலகில் தொடர்ந்து நடந்து வருகிற ஒன்றே.

காஃலிபா அல்-அமீன் அராபிய உலகில் கில்மான்களை, அவர்களுடனான உடலுறவுத் தொடர்புகளையும் நிறுவனமாக்கிய ஒருவர்.

ஒரு இஸ்லாமிய நீதிபதி தனக்கென நூற்றுக்கும் அதிகமான சிறுவர்களை “உபயோகித்த”மை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தாடியற்ற இளம் சிறுவர்களின் மீதான தங்களின் காம இச்சைகளை வெட்கமின்றிப் பல இஸ்லாமிய கவிஞர்கள் பாடிவைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இஸ்லாமியர்களால் காயடிக்கப்படுவது கறுப்பினத்தவர்களின் மீது மட்டுமல்லாமல் பரவலாக எல்லா இனத்தவர்களின் மீது செய்யப்பட்டது என்பதே வரலாறு.

ஆப்பிரிக்கக் கறுப்பர்களுக்கும், பழுப்பு நிற இந்தியர்களுக்கும், மஞ்சள் நிற மத்திய ஆசியர்களுக்கும் மட்டுமன்றி ஐரோப்பிய வெள்ளைர்களும் காயடிக்கப்பட்டதுதான் ஆச்சர்யம்.

மத்திய காலப்பகுதியில் ஐரோப்பாவின் ப்ராக் மற்றும் வெர்டுன் (Prague and Verdun) பகுதிகள் வெள்ளையர்கள் காயடிக்கப்படும் முக்கிய இடமாகவும், மத்திய ஆசியாவின் காஸ்பியன் கடலுக்கருகிலிருக்கும் காரஸோன் மஞ்சள் நிறத்தவர்கள் காயடிக்கப்படும் ஸ்தலமாகவும் இருந்திருக்கின்றன.

முக்கியமாக இஸ்லாமிய ஸ்பெயின் அதிகமாக வெள்ளை நிற அலிகளின் உற்பத்திக் கேந்திரமாக இருந்திருக்கிறது.

காலிஃபா அல்-முகாதிர் (908-937) அவரது பாக்தாத் அரண்மனையில் மட்டும் 11,000 அலிகளை வைத்திருந்ததாகத் தெரிகிறது. அவர்களில் ஏழாயிரம் பேர்கள் கறுப்பர்கள் எனவும், நான்காயிரம் பேர்கள் வெள்ளையர்கள் (கிரேக்கர்கள்) எனவும் மேலதிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

***

Gate_of_the_Harem_painting-1024x576

முகலாய அரசனான ஜஹாங்கீர் காலத்தில் பெருமளவிலான காயடிப்புகள் வங்காளத்தில் நிகழ்ந்ததாகவும், பின்னர் இந்தியா முழுவதும் ஒரு பொது வழக்கமாக மாறியதாகவும் வரலாறு.

பக்தியார் கில்ஜி 1205-ஆம் வருடம் வங்காளத்தின் மீது படையெடுத்து வெற்றி பெற்ற பின்னர் கைப்பற்றப்பட்டவர்களைக் காயடிப்பதும், அவ்வாறு காயடிக்கப்பட்டவர்களை நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பி வைப்பதுவும் பெருமளவு நடந்தது.

பதின்மூன்றாம் நூற்றாண்டில், குப்ளாய்கானின் அரசவையிலிருந்து வெனிசுக்குத் திரும்பும் வழியில் வங்காளத்தை அடைந்த மார்கோ-போலோ, வங்காளம் அலிகளின் பெரும் உற்பத்தி ஸ்தலமாக இருந்ததைக் காண்கிறார்.

அதே நேரத்தில் அவரைப் போலவே வங்காளம் சென்ற பிற நாட்டுப் பயணிகளான துராத்தே பர்போஸா மற்றும் ஃப்ரான்கோஸ் பையார்ட் போன்றவர்களும் அதனையே உறுதி செய்கிறார்கள். 1590-ஆம் வருடம் எழுதப்பட்ட அய்ன்-இ-அக்பரியும் இதனைப் பதிவு செய்கிறது.

1659-ஆம் வருடம் கோல்கொண்டாவில் ஏறக்குறைய 22,000 இந்து காஃபிர்கள் அவுரங்கசீபினால் காயடிக்கப் பட்டார்கள். ஜஹாங்கீர் மட்டும் ஏறக்குறைய 1200 அலிகளுக்குச் சொந்தக்காரனாக இருந்திருக்கிறான்.

அலாவுதீன் கில்ஜிக்குயின் சொந்த உபயோகத்திற்கென 50,000 அடிமைச் சிறுவர்களும், முகமது துக்ளக் 20,000 சிறுவர்களையும், ஃபிரோஸ் துக்ளக்கிடம் 40,000 சிறுவர்களும் இருந்திருக்கிறார்கள். அலாவுதீனின் புகழ்பெற்ற படைத்தளபதியான மாலிக்கபூர் ஒரு அலியே.

சுல்தான் குத்புதீன் முபாரக்கின் வலது கரமாக இருந்த குஸ்ரூ கானும் ஒரு காயடிக்கப்பட்டவரே. மத்தியகால இஸ்லாமிய அறிஞர்களான ஃபெரிஸ்டா, கொண்டாமிர், மின்ஹாஜ் சிராஜ், ஜியாவுதீன் பரானி போன்றவர்கள் அவர்களது காலத்தில் வலிமையுடனிருந்த சுல்தான்கள் – முகமது கஜினி, குத்புதீன் ஐபக், சிக்கந்தர் லோடி போன்றவர்கள் – சிறுவர்கள் மீது கொண்டிருந்த அபரிமிதமான இச்சைகளைக் குறித்துத் தெளிவாகவே எழுதிச் சென்றிருக்கிறார்கள்.

சுல்தான் முகமது என அறியப்படும் முகமது கோரி அவனது படைத்தலைவர்களில் ஒருவனாயிருந்த “ஹிந்து திலக்கின்” மீது கொண்டிருந்த காதல் அளவில்லாதது என்றே மேற்கூறிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

***

இந்தக் கட்டுரைப் பகுதி சிலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். அதைக் குறித்து எதுவும் செய்வதற்கில்லை. வரலாற்றினை எழுதுகையில் அதன் அத்தனை கோர முகங்களையும் மூலநூல் ஆசிரியர் எம்.ஏ.கான் அவர்கள் எழுதியுள்ள படி முடிந்தவரை வெளிக்காட்டுவதே உசிதமானது என்பது எனது தாழ்மையான கருத்து. இதுபோலவும் மனிதாபமற்ற கொடுஞ்செயல்கள் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம்.

(தொடரும்)

வன்முறையே வரலாறாய்…35

Share.
Leave A Reply