பிரேசில் நாட்டில் பயணிகள் பேருந்தில் ஏறி விளையாட்டாக சேட்டை செய்த சிறுவனுக்கு அந்த பேருந்தின் ஓட்டுனர் தக்க பாடம் கற்பித்துள்ளார்.

பிரேசிலில் நகர் ஒன்றில் அமைந்துள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பேருந்துகளில் ஓட்டுனர் எதிர்பாராதவாறு குறும்பு செய்து பொழுது போக்கலாம் என எண்ணிய சிறுவர்கள் அதற்கான வேலையில் இறங்கியுள்ளனர்.

சிறுவர்களில் ஒருவனின் காலனியில் உள்ள ‘shoe lace’-யை முன்னதாகவே கழற்றி விடுகிறான். பின்னர், அங்கு வரும் பேருந்துகளின் கதவு திறந்தவுடன், பேருந்தில் ஏறுவது போல் ஏறி படியில் கால் வைத்து ‘shoe lace’ கட்டிக்கொண்டு திரும்பி விடுகிறான்.

சிறுவன் பேருந்தில் தான் ஏற வருகிறான் என நம்பும் ஓட்டுனர்கள் சிறுவனின் செய்கையால் ஏமாந்து போவார்கள்.

சிறுவன் செய்யும் இந்த செயலை மறைவில் இருந்த அவனது நண்பர்கள் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், அந்த நிறுத்தத்திற்கு பேருந்து ஒன்று வருகிறது. ஏற்கனவே காலனி கயிறுகளை கழற்றியுள்ள அந்த சிறுவன், கதவு திறந்தவுடன் படியில் கால் வைத்து கயிற்றை கட்ட முயற்சிக்கிறான்.

சிறுவனின் செய்கையை கண்ட ஓட்டுனர், கதவை சட்டென மூடியுள்ளார். எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தில், சிறுவனின் கால் கதவிற்குள் சிக்கி கொள்கிறது.

எவ்வளவோ முயன்றும் அவனால் காலை வெளியே எடுக்க முடியவில்லை. பிறகு, உள்ளே இருப்பவர்களிடம் கதவை திறக்குமாறு கூறுவதுடன் வீடியோ முடிவடைகிறது.

யூடியூப்பில் அதிவேகமாக பரவி வரும் இந்த வீடியோ குறித்து பலர் ஓட்டுனரின் தண்டனையை பாராட்டியுள்ளனர்.

ஓட்டுனரை முட்டாளாக்க நினைத்த சிறுவனுக்கு, அவன் அந்த செயலை திரும்ப செய்யாத அளவிற்கு ஓட்டுனர் பாடம் கற்பித்துவிட்டார் என இணையதள பதிவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply