கடு­மை­யான வறட்­சி­யினால் பாதிக்­கப்­பட்ட மகா­ராஷ்­டிரா மாநி­லத்தில் குடிநீர் எடுத்து வரு­வ­தற்­காக ஒரு­வரே பல பெண்­களை திரு­மணம் செய்யும் கொடுமை நிலவி வரு­கின்­றது.

மகா­ராஷ்­டி­ராவின் சுமார் 19 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட கிரா­மங்­களில் வறட்­சியால் கடும் குடிநீர் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது. இதனால் வெகு தொலைவில் இருந்து குடிநீர் கொண்டு வரு­வ­தற்­காக ஒரு­வரே பல பெண்­களை திரு­மணம் செய்து கொள்­வது அதி­க­ரித்து வரு­கி­றது.

தானே மாவட்டம், ஷாகாபூர் தாலு­காவில் டென்­கான்மல் என்ற கிரா­மத்தைச் சேர்ந்த சகாராம் பகவத் (65வயது) என்­ப­வ­ருக்கு 3 மனை­விகள் உள்­ளனர். இது குறித்து அவர் கூறு­கையில், நான் தினக்­கூ­லி­யாக பணி­யாற்றி வரு­கிறேன்.

எங்கள் கிரா­மத்தில் வெகு­தொ­லைவில் உள்ள மலைப் பகு­தியில் இரண்டு கிண­றுகள் உள்­ளன.

அந்த கிண­று­களில் இருந்­துதான் குடிநீர் எடுத்து வர வேண்டும். அந்த இரண்டு கிண­று­க­ளிலும் நூற்றுக்க­ணக்­கான மக்கள் நீண்ட வரி­சையில் காத்­தி­ருப்­பார்கள்.

எனது முதல் மனைவி சமை­ய­லையும் குழந்­தை­க­ளையும் கவ­னித்துக் கொள்வார். எனவே மற்ற இரண்டு பேரை திரு­மணம் செய்தேன்.

அவர்கள் இரு­வரும் வீட்­டுக்குத் தேவை­யான குடிநீரை கொண்டு வரு­கி­றார்கள் என்று தெரி­வித்­துள்ளார்

சகாராம் பகவத் மட்­டு­மன்றி அந்த கிரா­மத்தைச் சேர்ந்த பெரும்­பா­லான ஆண்கள், குடிநீர் சுமப்பதற்காகவே ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply