திருப்பதி: ‘மைனா’ படத்தில் கதாநாயகனாக நடித்த விதார்த்- காயத்திரி தேவி திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.

vidarth_news22001ம் ஆண்டிலேயே சினிமாவில் அடியெடுத்துவைத்தவர் விதார்த். மின்னலே படத்தில் துணைநடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து சண்டக்கோழி, கொக்கி, லீ, திருவண்ணாமலை, குருவி, மைனா, ஜன்னல் ஓரம், வீரம், காடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விதார்த்.

vidarth_news1இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பரின் மகள் காயத்திரி தேவிக்கும் நிச்சயதார்த்தம் மே 4ஆம் தேதி பழனியில் நடைபெற்றது.

திருமணம் ஜூன் 11ஆம் தேதி (இன்று) திருப்பதியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருப்பதியில் இன்று காலை விதார்த்- காயத்திரி தேவி திருமணம் நடைபெற்றது. நடிகர் சங்க செயலாளர் ராதாரவி நேரில் சென்று வாழ்த்தினார்.

Share.
Leave A Reply