குடிநீர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண வேண்­டு­மெனில் ஒவ்­வொரு ஆணும் 3 பெண்­களை திரு­மணம் செய்து கொள்­ளுங்கள் என நீதி­பதி ஒருவர் தெரி­வித்­துள்ள கருத்து சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மத்­திய பிர­தே­சத்தில் பல  ஆண்­டு­க­ளாக கடு­மை­யான வறட்சி நில­வு­கின்­றது. இந்­நி­லையில் லிதோ­கரா கிரா­மத்தில் நடை­பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்­து­கொண்‌டு உரை­யாற்­றிய துணை மண்­டல நீதி­பதி பி.கே.பாண்டே என்­பவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில்,

நான் கடந்த சில நாட்­க­ளுக்கு முன் பைவார் கிராம பகு­தியை கடந்து சென்­ற­போது நள்­ளி­ரவு 2 மணிக்கு பெண்கள் தண்ணீர் பிடித்­துக் கொண்­டி­ருப்­பதை கண்டேன். இங்கு தண்ணீர் பிரச்­சினை பெரிய பிரச்சினை­யாக உள்­ளது.

இத்­த­கைய நிலைக்கு தீர்வு காண விரும்­பினால் ஒவ்­வொரு ஆணும் 3 பெண்­களை திரு­மணம் செய்­து கொள்­ள­வேண்டும்.

ஒரு பெண்ணை குழந்­தைகள் பெற்றுக் கொள்­வ­தற்கும், மற்ற இரு­வரை தண்ணீர் பிடிப்­ப­தற்கும் பயன்ப­டுத்­தலாம். தண்ணீர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண விரும்­பா­த­வர்கள் 3 பெண்­களை திரு­மணம் செய்ய வேண்­டி­ய­தில்­லை.

மத்­திய பிர­தே­சத்தில் தண்ணீர் சண்­டையில் பெண் ஒருவர் மற்­றொரு பெண்ணை கொலை செய்துள்ளார்.

பல பகு­தி­களில் தண்ணீர் பிரச்­சினை கார­ண­மாக பலர் தங்­களின் மகள்மாருக்கு திருமணம் செய்து வைப்பதையே தவிர்க்கிறார்கள். எனவே ஒருவர் ௩ திருமணங்களை செய்வதே இதற்கு தீர்வு என்று தெரிவித்துள்ளார்.

குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு மனைவி… தண்ணீர் கொண்டுவர 2 மனைவிகள்…!’

mumbai-water-wivesமும்பை: மகாரஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமங்களில் தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் தண்ணீர் கொண்டுவர ஒரு மனைவியும், குழந்தைப் பெற்றுக்கொள்ள தனியாக 2 மனைவிகள்  என்றும் வைத்துக்கொள்ளும் அவல நிலைக்கு கிராமத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த விநோத வழக்கம் குறித்து தனது வருத்தத்தை போபால் மாவட்ட நீதிமன்றத்தின் துணை நீதிபதி பி.கே.பாண்டே நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

maharastra-wivesthaniraaஅந்த நிகழ்ச்சியில் நீதிபதி பாண்டே கூறுகையில், ” மகராஷ்டிர மாநிலத்தின் கிராமங்களின் உயிர் ஆதாரப் பிரச்னையாக குடிநீர் சிக்கல் உள்ளது. அதேபோல பிற தேவைகளுக்கும் தண்ணீர் சிக்கல் தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இந்தப் பிரச்னைகளில் 19,000 கிராமங்கள் சிக்கியுள்ளன. இதனால் பெருமளவு மக்கள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர். அதிகாலை 2 மணிக்கு எழுந்து இரவு நேரம் என்றுகூட பாராமல் பெண்கள் தண்ணீர் கொண்டுவர மலைகளுக்குச்  செல்கிறார்கள்.

பல கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று  அங்கு மலையடிவாரத்தில் உள்ள கிணறுகளில் பலமணிநேரம் காத்திருந்து,கூட்ட நெரிசல்களுக்கு மத்தியில் தண்ணீரைக் குடங்களில் சுமந்து வந்து வீட்டுத் தேவைகளை தீர்க்கிறார்கள்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார்.

இந்த நிலைதான் மகராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பான்மை மக்களின் நிலையாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. அங்குள்ள ஜத்தாரா கிராமத்தில் வசிப்பவர் ஷக்காரம் பகத். இவருக்கு 3 மனைவிகள்.

மூன்று திருமணம் செய்தது குறித்து பகத் கூறுகையில், முதல் மனைவி குழந்தைகளைப் பார்த்துக்கொள்கிறார். குடும்பத்திற்குத் தண்ணீர் தேவை அதிகரித்துக் கொண்டு போனதால் மீண்டும் திருமணம் செய்து கொண்டேன். அதே நேரத்தில் இரண்டாவது மனைவிக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் எனக்கு வேறு வழியில்லை.

Share.
Leave A Reply