புத்­தளம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கல்­லடி பிர­தே­சத்தில் 17 வய­து­டைய மாண­வி­யொரு­வரைப் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­ குற்­றச்­சாட்டின் பேரில் அச்­சி­று­மியின் காதலர் உட்­பட மேலும் இரு இளை­ஞர்கள் புத்­தளம் பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்­டுள்­ளனர்.

புத்­தளம் செவ்­வந்­தீவு பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தென்­னந்­தோட்டம் ஒன்றில் வைத்தே இந்த மாண­வி இவ்­வாறு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­ப­தாக புத்­தளம் பொலிஸார் தெரி­வித்­தனர்.

கல்­லடி பிதே­சத்தைச் சேர்ந்த குறித்த சிறு­மியின் காத­ல­னான 24 வயது இளை­ஞ­னுடன், புத்­தளம் செவ்வந்­தீவு பிர­தே­சத்தைச் சேர்ந்த 19 மற்றும் 21 வய­து­டைய இளை­ஞர்­களே இவ்­வாறு கைது செய்யப்பட்­டுள்­ளனர்.

இவர்­களால் கூட்டு வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட கல்­லடி போதி­ரா­ஜ­புர பிர­தே­சத்தைச் சேர்ந்த குறித்த மாண­வி புத்­தளம் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார்.

நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாண­வி புத்­தளம் நகரில் அமைந்­துள்ள தனியார் கணினி பயிற்சி நிலை­யத்­திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்­டி­ருந்த போது மாண­வி­யின் காத­லான இளைஞன் அவளை தனது மோட்டார் சைக்­கிளில் ஏற்றிக் கொண்டு புத்­தளம் செவ்­வந்­தீவு பிர­தே­சத்தில் அமைந்­துள்ள தென்னந் தோட்டம் ஒன்­றிற்குச் சென்று அங்கு அவளை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்படுத்­தி­யுள்ளார்.

இதனை அங்கு மறைந்­தி­ருந்த மற்­றைய இரு இளை­ஞர்­களும் தங்­க­ளது கை தொலை­பேசியில் வீடியோ எடுத்து அதனை மாணவி மற்றும் அவ­ளது காத­ல­னிடம் காட்டி அதனை இணை­யத்தில் பதி­வேற்றப் போவ­தாக பயங்­காட்­டி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இத­னை­ய­டுத்து மாண­வி­யின் காதலன் அவளை அங்கு விட்­டு­விட்டு அங்­கி­ருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, அங்­கி­ருந்த மாண­வியை மற்­றைய இரு இளை­ஞர்­களும் மாறி மாறி பல தட­வைகள் வல்லுறவுக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக மாண­வி பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

கைதுசெய்­யப்­பட்­டுள்ள சந்­தேக நபர்­க­ளான இளை­ஞர்­களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று பொலிஸார் ஆஜர் செய்­­த­போது அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

Share.
Leave A Reply