சிம்புவுக்கு கடந்த இரண்டு வருடங்கள் போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த இரண்டு வருடங்களில் அவருடைய நடிப்பில் உருவான எந்த படங்களும் வெளியாகவில்லை.
மேலும், சில படங்கள் பாதியிலேயே நிற்கிறது. ஒரு சில படங்கள் முடிவடைந்தாலும் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இப்படியாக பல பிரச்சினைகள் அவருக்கு இருந்தாலும், படவாய்ப்புகள் அவரை தேடி வந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போது கௌதம் மேனன் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலமாக இடைவிடாது இந்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்புவுக்கு தற்போது ஒரு சிறு ஓய்வு கிடைத்துள்ளதாம்.
இதை சிம்புவே, அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மராத்தான் போல் கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான் ஆகிய படங்களின் படப்பிடிப்பில் ஓடி ஓடி நடித்தது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இப்போதைக்கு ஒரு சிறு ஓய்வு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
கிடைத்த ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சென்று ஜாலியாக பொழுதை கழிக்காமல், தன்னுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க வேண்டி, மங்களூரில் உள்ள முர்தேஷ்வரா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார் சிம்பு.
அங்குள்ள சிவன் சிலையை சிம்பு வணங்கியபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவரே தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இதன் பிறகாவது சிம்புவின் பிரச்சினைகள் அனைத்தும் விலகி, அவருக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என நம்புவோமாக.
வயதான ஹீரோக்களுடன் ஜோடிசேர தயாராக உள்ளதாக நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளாராம்.
தமிழில் ஜெயம் ரவியுடன் அப்பாடக்கர், விமலுடன் மாப்ள சிங்கம், விஜய்சேதுபதியுடன் இறைவி ஆகிய திரைப்படங்களில் நடிக்கும் அஞ்சலி, தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
இளம் ஹீரோக்களுடன் நடித்த அவர் இப்போது வயதான பாலகிருஷ்ணாவுடன் நடிக்க சம்மதித்து உள்ளது தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாம்.
வேறு சில இளம் கதாநாயகிகள் நடிக்க முன்வராத நிலையில் அதற்கு அஞ்சலி சம்மதம் தெரிவித்ததை பற்றி பலரும் பலவிதமான பேசுகின்றனராம்.
வயதான ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதால் இளம் ஹீரோக்கள் அஞ்சலியை ஒதுக்கி விடுவார்களே! இதுகுறித்து அஞ்சலி கூறும்போது, வயதான ஹீரோக்களுடன் நடிப்பது தவறல்ல. நான் பெரிய ஹீரோக்களுடன் நடிக்க எப்போதும் தயாராகவே இருக்கிறேன் என்று முகத்திலடித்ததுபோல கூறிவிட்டாராம்