வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க்கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா 11 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை சிறப்பாக இடம்பெற்றது.
ஆலயத்தின் கும்பாபிஷேக தினத்தை முன்னிட்டு காலை 6 மணிக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்று மூலஸ்தபானத்திலே வேற்பெருமானுக்கு அந்தண சிவாச்சாரியார்கள் 1008 சங்குகளால் ஆனந்த அபிஷேகம் செய்தனர்.
விசேட அம்சமாக இன்று மாலை 4 மணிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று ஆறுமுகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்றது.
திருக் கல்யாணக் கோலாகலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வள்ளி தெய்வானை சமேதரராக எம்பெருமான் உள்வீதி வலம் வந்தார்.
ஆலயத்தின் குபேர திக்கு என அழைக்கப்படும் வடக்கு வீதியில் பூங்கனிச் சோலைகள் நிறைந்த சூழலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
ஆரம்பமாகியது.இதன் போது வடக்கு வீதியில் புதிதாக அமைக்கப்பட்டு வேலைகள் பூர்த்திடையும் தறுவாயை எட்டியுள்ள கோபுரத்திற்கு எம்பெருமானின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொடுக்கும் அழகுக் காட்சி இடம்பெற்றது.
மாலை 6 மணியளவில் சண்முகப்பெருமானின் வெளிவீதி உலா ஆரம்பமானது.