மகிந்த ராஜபக்ஷவை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பிரதம வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் மற்றுமொரு கூட்டம் நேற்று மாத்தறையில் இடம்பெற்றிருந்தது.

இதில் மகிந்தராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 76 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.

சுதந்திர கட்சியின் உறுப்பினர்களும், எல்லாவல மேதாநந்த தேரர், மக்கள் ஐக்கிய முனு;னணியின் தலைவர் தினேஸ்குணவர்தன, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஜனநாயக இடதுசாரிகள் முன்னணியின் தலைவர் வாசுதேவநாணயக்கார உள்ளிட்ட பலர் இதில் கலந்துக் கொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும், மகிந்தராஜபக்ஷவுக்கு ஆதரவான கூட்டங்களில் பங்கேற்கும் சிறிலங்கா சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்னர் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

/p>

மஹிந்த ஆதரவு கூட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பங்கேட்பு (படங்கள்)
14-06-2015

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்கும் நோக்கில் தற்போது மாத்தறை நகரில் நடத்தப்படும் பொதுக் கூட்டத்தில்  சிலஙகா சுதந்திரக் கட்சி உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த 50ற்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 4 மணியளவில் மாத்தறை சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் இந்த கூட்டம் ஆரம்பமாகியுள்ளதுடன் இதில் பெருந்திரளான மக்களும் கலந்துக்கொண்டுள்ளனர்.

00130290111036IMG_9878

Share.
Leave A Reply