ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன் பயணம் ஒன்று செல்வதற்காக பஸ்ஸில் ஏறி ஆசனத்தில் அமர்ந்திருந்த போது மாணவியின் ஆசனத்திற்கருகில் அமர்ந்திருந்த சந்தேக நபர் தனது காற்சட்டையின் சிப்பை நீக்கி தனது அந்தரங்கத்தை மாணவிக்குக் காட்டியுள்ளார்.
இதன் பின்னர் இது பற்றி குறித்த மாணவி தனது தாய்க்குக் கூறியதையடுத்து தாய் தனது கையிலிருந்த குடையினால் அந்நபரைத் தாக்கியுள்ளார்.
பின்னர் பஸ்ஸிலிருந்த ஏனைய பயணிகள் அந்நபரைப் பிடித்து தாக்கி குளியாபிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் குளியாபிட்டி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, சிறைச்சாலை ஊடாக சந்தேக நபரை மனோவியல் வைத்தியரிடம் காட்டுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.