நாவாந்துறைப் பகுதியில் திருட்டுத் தனமாக வளவினுள் புகுந்து புறா பிடிக்க முயன்ற 15 வயதுச் சிறுவனை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார் இளம்குடும்பஸ்தர்.

யாழ் நகரப்பகுதியில் உள்ள கடையொன்றில் வேலை செய்யும் குறித்த குடும்பஸ்தர் அண்மையிலேயே திருமணம் முடித்து தனிக்குடித்தனம் நடாத்திவந்துள்ளார்.

இவர் புறா உட்பட்ட பல பறவைகளும் வளர்த்து விற்று வரும் தொழிலும் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலைக்குச் சென்று விட்டு அவசர தேவை காரணமாக இடைநடுவில் தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர் மலசலகூடத்திற்குச் சென்ற போது அங்கு 15 வயதான சிறுவன் ஒருவன் பதுங்கியிருந்துள்ளான்.

சிறுவனைப் பிடித்து தாக்கத் தொடங்கிய குடும்பஸ்தர் வீட்டின் முன்பகுதியால் எப்படி வந்தான் இவன் என  வீட்டில் தனியே இருந்த மனைவியிடம் கேட்டுவிட்டு மனைவியையும் தாக்கத் தொடங்கியதாகத் தெரியவருகின்றது. சிறுவன் மனைவியின் கள்ளக்காதலனா எனவும் கேட்டு மனைவியைத் தாக்கியுள்ளார்

அதன் பின்னர் அயலவர்கள் எல்லோருமாகச் சேர்ந்து சிறுவனை அச்சுறுத்தி கேட்ட போது புறா பிடிக்க வந்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதன் பின்னர் சிறுவனின் தாயை அழைத்து வந்த அயலவர்கள் அவனை பொலிசில் கொடுக்காது தாய்க்கு புத்திமதி கூறி அனுப்பியதாகத் தெரியவருகின்றது.

Share.
Leave A Reply